சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு "ஆப்பு".. ஐஐடி நிபுணர்கள் வர்றாங்களாமே.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டிருக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து ஐஐடி நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய கோரிய வழக்கில், தமிழக வீட்டு வசதி வாரியம் பதில் தருமாறு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த எஸ்.லீலா என்பவர், ஹைகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உள்ளதாவது:

கார்பஸ் தொகை: "தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை ரூ.1.23 கோடிக்கு வாங்கினேன். கார்பஸ் தொகை என்று தனியாக ரூ. 50 ஆயிரமும் செலுத்திவிட்டேன். இந்த வீடு கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பல லட்சம் செலவில் உள் அலங்கார வேலைகளை செய்திருக்கிறேன்.
ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி வர்ணம் பூசுதல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைகளை வீட்டுவசதி வாரியம் செய்து கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி பணிகளை செய்து தருமாறு கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.
குடியிருப்புகள்: என்னை போல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கியவர்களும் கொடுத்துள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால்தான வீட்டு வசதி வாரியம் அய்யனம்பாக்கம் சுற்றி கட்டியுள்ள 5 ஆயிரம் வீடுகள், சோழிங்கநல்லூரை சுற்றியுள்ள ஆயிரம் வீடுகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் விற்பனையாகாமல் உள்ளன.
இந்த வேலைகளை செய்து கொடுக்கும்படி வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் செயற் பொறியாளரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, தங்களின் சுயலாபத்துக்காக செயல்படுவதால்தான் ஏற்கெனவே வீட்டுவசதி வாரியம் சார்பில் அயனம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5 ஆயிரம் வீடுகள், சோழிங்கநல்லூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன.
தரமற்ற பொருட்கள்: மேலும், தரமற்ற பொருட்களைக் கொண்டு இந்த அடுக்குமாடி வீடுகளை கட்டியிருப்பதால் இவற்றின் உறுதித்தன்மை மற்றும் தரப் பரிசோதனை தொடர்பாக, சென்னை ஐஐடி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
அதிக பொருட்செலவில் இந்த வீட்டை வாங்கியும், தற்போது நிம்மதியில்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, இது தொடர்பாக நான் உட்பட, வீடு வாங்கிய பலர் அளித்துள்ள மனுவைப் பரிசீலிக்குமாறு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
ஒத்திவைப்பு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர், செயற் பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications