சென்னையில் 8 வழிச்சாலை.. மெரினா உழைப்பாளர் சிலை டூ கலங்கரை விளக்கம் வரை.. மொத்தமா மாறப்போகுது!
சென்னை: உலகிலேயே நகரத்தில் அமைந்த 2-வது மிக நீளமான கடற்கரையான சென்னை மெரினா பகுதியில் முக்கிய மாற்றங்கள் நடைபெற இருக்கிறது. மெரினா காமராஜர் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், உழைப்பாளர் சிலை டூ கலங்கரை விளக்கம் வரை உள்ள தலைவர்களின் சிலைகள் இதற்காக மாற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் நகரத்தில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமைக்குரியது சென்னை மெரினா கடற்கரை. சென்னையில் உள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் மெரினா கடற்கரை உள்ளது என்றால் அது மிகையல்ல. சென்னைக்கு வரும் வெளியூர் வாசிகள், சுற்றிபார்க்கும் இடங்களில் மெரினா கடற்கரை கண்டிப்பாக இருக்கும். இதனால் சென்னை மெரினா கடற்கரை எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க
சென்னை வாசிகளும் காலை மற்றும் மாலை நேரங்களில் மெரினா கடற்கரையில் இளைப்பாற நடைபயிற்சி செல்வதை பார்க்க முடியும். இப்படி எப்போதும் பிசியாகவே காணப்படும் மெரினா கடற்கரையில் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காமராஜர் சாலையில் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
இதனால், மெரினா காமராஜர் சாலை வழியாக இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் செல்லும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகளை அகலப்படுத்துதல், புதிய மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
8 வழிச்சாலையாக காமராஜர் சாலை
இந்த நிலையில்தான், மெரினா கடற்கரையையொட்டிய காமராஜர் சாலையை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. தற்போது 4 வழி சாலையாக உள்ள மெரினா காமராஜர் சாலை 8 வழி சாலையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 2.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 சிலைகளும் இடமாற்றம்
தற்போது 2.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 23 மீட்டர் அகலத்துடன் 4 வழிச் சாலையாக காணப்படுகிறது. இதை கூடுதலாக 6 மீட்டர் அகலப்படுத்தி 29 மீட்டர் அகலத்துடன் 8 வழிச் சாலையாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா காமராஜர் சாலையை ஒட்டி பொதுமக்கள் நடைபாதை உள்ளது. இதில், தலைவர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சாலை விரிவாக்கம் செய்யும் போது சிலைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருக்கும்.
எனவே, சாலை விரிவாக்கம் பணி காரணமாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள 9 சிலைகளும் இடமாற்றம் செய்ய இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், தற்போது 20 மீட்டர் அகலத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலை விரிவாக்கம் செய்யப்படாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை காமராஜர் சாலையை விரிவுபடுத்துவதால் சிரமம் இன்றி பயணிக்க முடியும் என்பதால், வாகன ஓட்டிகள் இடையே மாநகராட்சியின் இந்த திட்டம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications