இரண்டாவது மனைவி சமைத்த உணவை.. முதல் மனைவியிடம் தந்த கணவர்.. அடுத்த நொடியே ஆடிபோன சென்னை அரும்பாக்கம்
சென்னை: இரண்டாவது மனைவி தயாரித்த சாப்பாட்டை, முதல் மனைவியிடம் நள்ளிரவு 2 மணிக்கு கொண்டுவந்து தந்து சாப்பிட சொல்லி அடம்பிடித்துள்ளார் போதை கணவர்.. கடைசியில் என்ன ஆனது தெரியுமா? சென்னையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திலீப் சிங்.. 50 வயதாகிறது.. இவர் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் பார்வதி.. 45 வயதாகிறது. துப்புரவு பணி செய்து வருகிறார். திலீப்புக்கு அதே பகுதியில் 2வது மனைவியும் இருக்கிறாராம்.

குடிப்பழக்கம்: குடிப்பழக்கத்திற்கு அடிமையான திலீப் சிங், தினமும் குடித்துவிட்டு வந்து குடிபோதையில் முதல் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல இரண்டாவது மனைவி தொடர்பாகவும் குடும்பத்தில் அடிக்கடி தம்பதிக்குள் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று விடிகாலை 2 மணிக்கு, குடிபோதையில் இருந்த திலீப், பார்வதியிடம் தகராறு செய்துள்ளார். அத்துடன், கிச்சனில் காய்கறி வெட்டும் கத்தியால், பார்வதியின் வயிற்றையும் லேசாக கிழித்துவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த பார்வதி, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. அரும்பாக்கம் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசார், திலீப்பை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
துப்புரவு தொழிலாளி இதையடுத்து, திலீப் ஏன் பார்வதியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து, போலீசார் செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில், "சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திலீப் சிங் என்பவரது மனைவி பார்வதி (45), தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் திலீப் சிங்கிற்கு இரண்டாவது திருமணம் நடந்தது.
நேபாளத்தில் வசிக்கும் இரண்டாவது மனைவி கடந்த ஒரு வருடமாக பார்வதி வீட்டில் தனி அறையில் வசித்து வந்தனர். இதனால் பார்வதிக்கும் அவரது கணவர் திலீப் சிங்குக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை பார்வதியிடம் தனது இரண்டாவது மனைவி தயாரித்த உணவை சாப்பிடுமாறு திலீப் சிங் கூறியுள்ளார். பார்வதி சாப்பிட மறுத்தாள்.

வாக்குவாதம்: இதனால் ஆத்திரமடைந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திலீப் சிங் கல் மற்றும் கத்தியால் பார்வதியை தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த பார்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மேற்கண்ட குற்றத்தில் ஈடுபட்ட திலீப்சிங் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி, கல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மனைவி தயாரித்த சாப்பாட்டை, நடுராத்திரி 2 மணிக்கு வந்து, முதல் மனைவியிடம் தந்து சாப்பிட சொல்லி அடம்பிடித்துள்ளார் போதை கணவர்.. இது ஒரு கொலையில் முயற்சியில் போய் முடிந்துள்ளது சென்னைவாசிகளை அதிர வைத்து வருகிறது.
-
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு












Click it and Unblock the Notifications