ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்த கோர்ட் மறுப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்போ செந்தில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் ஆகியோர் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தனர்.
அப்போது அரசு தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, நாகேந்திரனை சிறை மாற்றம் செய்வது குறித்து அடுத்த விசாரணையில் பதிலளிப்பதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞரை நியமித்துகொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அஞ்சலை, பொற்கொடி, மலர்க்கொடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது தற்போதைய சூழலில் விசாரணை நடத்த முடியாது என தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications