பக்கத்து கடைக்காரரை கார் ஏற்றி கொல்ல முயற்சி.. சென்னையில் துணிக்கடைக்காரர் கைது! அதிர வைத்த காரணம்!
சென்னை: சென்னை வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக காரை ஏற்றி துணிக்கடைக்காரரை கொலை செய்ய முயன்ற பக்கத்து கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி 5வது பிரதான சாலையில் துணிக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர், மதுபோதையில் காரை ஓட்டி வந்து எதிரே துணிக்கடை நடத்திவரும் ஜெபஸ்டினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடையின் கண்ணாடிகளை உடைத்து காருடன் கடைக்குள் புகுந்து ஜெபஸ்டினை காரை விட்டு ஏற்ற முயன்றுள்ளார்.

கார் தன்னை நோக்கி வேகமாக வந்ததைப் பார்த்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளார் ஜெபஸ்டின். சிவக்குமாரின் கார், துணிக்கடைக்குள் புகுந்து, கண்ணாடிகளை நொறுக்கியுள்ளது. கார் உள்ளே புகுந்ததில் கடையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழில் போட்டி காரணமாக காரை ஏற்றி துணிக்கடைக்காரரை கொலை செய்ய முயன்ற பக்கத்து கடைக்காரர் சிவக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications