பெண் ஊழியருடன் உல்லாசம்.. நைசாக வீடியோ எடுத்து மிரட்டல்.. கணவருக்கும் அனுப்பிய கொடூரன் கைது
சென்னை: இளம் பெண்ணை ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு வீடியோ எடுத்து அதனை அவரது கணவருக்கு அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் கொளத்தூர் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். அதில் ஒன்றரை வருடங்களாக 28 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவருக்கு சரியான வேலை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலம் . அந்த பெண்ணிடம் சகஜமாக பேசி பழகியுள்ளார்.

அருணாச்சலம்
பின்னாட்களில் அந்த பெண்ணிடம் அருணாச்சலம், "உனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னை பார்த்துக் கொள்" என ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பலமுறை உடலுறவு கொண்டதாக தெரிகிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அருணாச்சலத்தின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் அந்த பெண் அவரை விட்டு விலக ஆரம்பித்துள்ளார்.

வேலைக்கு செல்லாத பெண்
அதன்பிறகு வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அருணாச்சலம், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போது எடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை வைத்துக் கொண்டு அந்த பெண்ணை மிரட்டி மீண்டும் உடலுறவுக்கு அழைத்துள்ளார்.

பெண் மறுப்பு
ஒரு கட்டத்தில் அந்த பெண் மறுக்கவே அருணாச்சலம் அந்த பெண்ணின் கணவருக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை தேடி வந்தனர்.

அருணாச்சலம் கைது
இந்நிலையில் நேற்று இரவு அருணாச்சலத்தை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு வரும் பெண்களை இது போன்ற மிருகங்கள் வேட்டையாடுவது தொடர்கதையாகிவிட்டது. அது போல் பெண்களும் இது போன்ற காமூகன்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த இடம் இல்லாவிட்டால் இன்னொரு இடத்தில் வேலை. வேலைக்காக அருணாச்சலம் போன்ற கொடூரன்களை ஊககுவிக்கவே கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications