தரமணியில் தரையில் மின்னிய நாகப்பாம்பு! ஆனா.. இதை பாத்தீங்களா? வியந்த வனத்துறையினர்
சென்னை: சென்னை தரமணியில் பிடிக்கப்பட்ட நாகப்பாம்பின் உடலில் வித்தியாசமான அடையாளம் இருந்ததை வனத்துறையினர் ஆச்சரியத்தோடு கவனத்திற்ருக்கின்றனர். இந்த பாம்பு தற்போது கிண்டி சிறுவர் பூங்காவில் விடப்பட்டிருக்கிறது. இதனை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி தரமணியில் உள்ள சிபிடி வளாகத்தில் பாம்பு இருப்பதாக வன உயிரினப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து வனத்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு அங்கு ஆச்சரியம் காத்திருந்திருக்கிறது.

பொதுவாக நாகப்பாம்பின் தலைக்கு பின்புறம் U வடிவ அடையாளம் இருக்கும். நாகப்பாம்புகளுக்கே உரிய அடையாளம் இது. ஆங்கிலத்தில் இதை Spectacle Mark என்று சொல்வார்கள். ஒவ்வொரு நாகத்திற்கும் இது கொஞ்சம் வேறுபட்டிருக்கும். இருப்பினும் ராஜநாகம் தவிர, எல்லா நாகங்களுக்கும் இது இருக்கும். ஆனால் தரமணி சிபிடி வளாகத்தில் இருந்த நாகப்பாம்புக்கு உடலில் மூன்று இடங்களில் இந்த U வடிவம் இருந்திருக்கிறது. உலகில் இதற்கு முன்னர் வேறு எந்த நாகப்பாம்புக்கும் இதுபோன்ற அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை.
எனவே இது புதிய வகை பாம்பு இனமா? என்று கேள்வி எழுந்தது. இதனையடுத்து பாம்பை மீட்ட வனத்துறையினர் அதை ஆய்வு செய்தனர். ஆய்வில் இது வழக்கமான இந்திய நாகம் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே இதை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் விட்டிருக்கின்றனர். பாம்பு புதிய சூழலுக்கு தன்னை பழக்கிக்கொண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நாகப்பாம்பின் உடலில் காணப்படும் அடையாளங்கள் குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த பாம்பு ஆராய்ச்சியாளரும், முன்னாள் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி விலங்கியல் பேராசிரியருமான ஆல்பர்ட் ராஜேந்திரன் டைம்ஸ் ஆப் இந்திய செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "இதுபோன்ற அடையாளங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இந்திய மலைப்பாம்பு, வைப்பர், மற்றும் பல்வேறு குழி விரியன் பாம்புகள் போன்ற பல பாம்பு இனங்கள் தங்கள் உடலில் தனித்துவமான புள்ளிகளைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த U போன்ற அமைப்பு நாகப்பாம்புகளுக்கு மட்டுமே உரியது, அதுவும் பொதுவாக தலையில் மட்டும் காணப்படும்.
பாம்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த அடையாளங்களை வைத்து பாம்புகளை அடையாளம் காண்பது வழக்கம். ஒரே இனத்தைச் சேர்ந்த பாம்புக் குஞ்சுகளின் தலையில் கூட பல்வேறு விதமான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால், இதுபோன்று உடலின் மற்ற பாகங்களில் இந்த அடையாளங்கள் காணப்படுவது இதுவே முதல் முறை" என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஒழுங்கற்ற அடையாளங்கள் புறத்தோல் தோலின் அசாதாரண மாறுபாடு ஆகும். இது நிறமி குறைபாடு, அல்பிணிசம், லியூசிசம் அல்லது விட்டிலிகோ போன்ற மரபணு பிறழ்வு அல்லது பிறவி கோளாறு காரணமாக ஏற்படலாம். மேலும், பாலியல் முதிர்ச்சியின் காரணமாக ஹார்மோன் மாற்றங்களாலும் இதுபோன்ற அடையாளங்கள் தோன்றலாம். இருப்பினும், இந்த அம்சங்கள் பொதுவாக மரபணு ரீதியாக அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதில்லை.
இந்த நாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், மரபணுக்களின் கணிக்க முடியாத தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய உதாரணமாக இது அமைந்துள்ளது. என்று பாம்பு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நாகப்பாம்பின் விஷம்
இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு நாகப்பாம்பும் கணிசமான அளிவல் காரணமாகும். இந்த பாம்பு கடித்தால் 30 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு போக வேண்டும். தாமதம் ஏற்படும்பட்சத்தில் உயிரிழப்பை தவிர்க்க முடியாது. இதன் விஷம் நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி அதை செயலிழக்க வைத்துவிடுகிறது. எனவே சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, மூச்சு திணறி கடிபட்டவர் மரணிப்பார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications