சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏம்ப்பா! நாமலாம் சென்னைல தானே இருக்கோம்? எனக்கென்னமோ ஊட்டில இருக்க மாதிரி ஒரு ஃபீலிங்! #Chennaisnow

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் #chennaisnow என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 4 அல்லது 5 நாட்களாக கடுங்குளிர் நிலவி வருகிறது. ஏதோ மார்கழி மாத பனி போல் உள்ளது. காலை நேரங்களில் வெளியில் இருக்கும் வாகனங்கள் மீது நீர் துளிகள் உள்ளன.

மாலை நேரங்களில் வாகனங்களில் 30 கி.மீ வேகத்தில் சென்றாலும் கடுங்குளிராக உள்ளது. காலை நேரங்களில் வெயில் வந்தாலும் குளிரானது இருக்கத்தான் செய்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் நிலவுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது.

ஜில் ஜில்! கூல் கூல்! சென்னைக்கு “ஹாய்” சொல்லும் பனி! அப்போ மழை “இனி?” - வானிலை மையம் சொல்வது இதான் ஜில் ஜில்! கூல் கூல்! சென்னைக்கு “ஹாய்” சொல்லும் பனி! அப்போ மழை “இனி?” - வானிலை மையம் சொல்வது இதான்

வடிவேல் காமெடி

வடிவேல் காமெடி

இந்த குளிர் ஒரு புறம் இருக்க, நெட்டிசன்கள் #Chennaisnow எனும் ஹேஷ்டேக்கை டிரென்டாக்கி வருகிறார்கள். அவற்றில் சில வாசகர்களின் பார்வைக்காக:

சென்னையில் கடுங்குளிர் நிலவி வருகிறது. சென்னை மக்கள் வெளியே போனால் என்னா குளிருடா சாமி நிலைதான் இருக்கிறது என வடிவேல் காமெடி போட்டு கேட்கிறார் இந்த நெட்டிசன்.

குளிர் இயல்பா

குளிர் இயல்பா

சென்னை தற்போது லண்டன் போல் உள்ளது. குளிராக இருக்கிறது, காற்று வீசுகிறது, தற்போது மழை பெய்கிறது. இது இயல்புதானா என இந்த நெட்டிசன் கேட்டுள்ளார்.

சென்னைக்கு என்ன ஆச்சு

சென்னைக்கு என்ன ஆச்சு

சென்னைக்கு என்னடா ஆச்சு? வெயில் அடிக்குது, இப்போ எவ்ளோ குளிருது.. என்கிறார் இந்த நெட்டிசன்.

சென்னைலதானே இருக்கோம்

சென்னைலதானே இருக்கோம்

நாமலாம் சென்னைல தானே இருக்கோம். எனக்கு என்னமோ ஊட்டில இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்... என இந்த நெட்டிசன். நாம கப்பல்ல மிதக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் என வடிவேல் காமெடியை பயன்படுத்தியுள்ளார்கள்.

ஸ்னோலாம் டிரென்ட்டா

ஸ்னோலாம் டிரென்ட்டா

என்னடா ஸ்னோலாம் டிரென்ட் பண்றீங்க என வடிவேல் காமெடியை வச்சு டிரோல் செய்கிறார்கள்.

ஏசி போட்ட ஆபிஸ்

ஏசி போட்ட ஆபிஸ்

ஏசி போட்ட ஆபிஸை விட வெளியில் வந்தால் குளிர் அதிகமா இருக்கு. சென்னையை மலை பகுதியாக அறிவிக்கலாமே என்கிறார் இந்த வலைஞர்.

English summary
Chennai looks like Ooty as heavy fog formed. #Chennaisnow is trending.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X