சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டின் தின்பண்டங்களில் எலி.. டீன் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: வடசென்னையில் ஏழை மக்களின் முக்கியமான மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் அமைந்துள்ள கேண்டீனில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை எலி தின்று செல்லும் காட்சி வெளியானது. இதையடுத்து சம்மந்தப்பட்ட கேண்டினை மூட சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.. இதுதான் வட சென்னை மக்களுக்கு முக்கியமான மருத்துவமனையாகும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைவிட மிகவும் அதிகப்படியான வசதி உள்ள மருத்துவமனை தான் ஸ்டான்லி மருத்துவமனை.. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். வட சென்னையில் உள்ள ஏழை மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாகும்..

சென்னை முழுவதுமே மக்கள் சட்டென சொல்லும் அளவிற்கு புகழ் பெற்ற ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் அமைந்துள்ளது. அங்கு விற்பனைக்காக கண்ணாடி ரேக்குகளில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று வேகமாக உள்ளே வந்து தின்று செல்லும் காட்சிகள் வெளியானது. கண்ணாடி பெட்டியில் இருந்த வடை, பஜ்ஜி போன்றவற்றை எலி சாப்பிட்டு விட்டு சென்றது.
இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள், கேண்டீன் நடத்துபவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். எலி தின்று செல்லும் பஜ்ஜி வடை போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்வது சரியா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து குறிப்பிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படாது என்று தின்பண்டங்கள் அனைத்தையும் பை ஒன்றில் எடுத்துச் சென்றார் கேண்டீன் நடத்துபவர்.
இதனிடையே ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேன்டீனில் எலி சுற்றியது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதால், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அடுத்து சம்மந்தப்பட்ட கேண்டீனை மூட சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications