சென்னையில் அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. உயிரிழப்புகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
சென்னை: கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் படுக்கைகளுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 13,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் 94 ஆகப் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது

கொரோனா பரவல்
குறிப்பாக, வைரஸ் பரவலின் தாக்கம் சென்னையில் மோசமாக உள்ளது. தற்போது சென்னையில் தினசரி வைரஸ் பாதிப்பு 4000ஐ கடந்துள்ளது. அதேபோல சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது, சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளில், அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை
மேலும், சென்னையில் ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்டடங்களில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது கூடுதல் கொரோனா படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதல் படுக்கைகள்
கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உட்பட மொத்தம் 2000 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு இருந்தன. கொரோனா 2ஆம் அலையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக புதிதாக 750 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் 500 ஆக்சிஜன் வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிறப்பு மருத்துவமனை
இதன் மூலம் இப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 1300ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையும் 3250ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications