சென்னை புறநகர் பரபரப்பு.. பழைய பல்லாவரத்தில் 50 ஆண்டு வீடுகள் இடிப்பு.. துடிதுடித்து போன ஓனர்கள்
சென்னை முழுவதுமே பழைய கட்டிடங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பயன்படுத்த தகுதியற்ற கட்டிடங்களை உடனடியாக இடிக்க, மாநகராட்சி அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
காரணம், சேப்பாக்கத்தில் பழைய கட்டிடம் ஒன்று, கடந்த 2014ல் திடீரென இடிந்து விழுந்தது.. அதற்கு பிறகு, 2015ல், சென்னை மாநகராட்சி சார்பில், பழைய கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அபாயகரமான கட்டிடங்களுக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில், ஆபத்தான கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவைகள் இடிக்கப்பட்டன.

சென்னை: பாரிமுனை சம்பவத்தை போல், இனியும் ஒரு சம்பவம் நடக்ககூடாது என்பதற்காகவே, மாநகராட்சி சாட்டையை சுழற்றி வருகிறது.. அந்தவகையில், வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த கட்டிடங்களின் விபரங்களும் சேகரிப்பட்டு வருகின்றன..
அதேபோல, வார்டு வாரியாக, பொறியியல் துறை அதிகாரிகளும் கணக்கெடுத்து வருகிறார்கள். இதில், வசிக்க தகுதியில்லாத கட்டிடங்களை மட்டும் இடிப்பதற்காக நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன.
உரிமையாளர்கள்: குறிப்பிட்ட நாளில் இடிக்காவிட்டால், மாநகராட்சியே நேரடியாக வந்து இடித்துவிட்டு, அதற்கான செலவை உரிமையாளரிடம் இருந்து வசூலித்தும் விடுகிறது.. இதையும் மீறினால், குற்றவியல் தண்டனை சட்டத்தில் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
சென்னை போன்ற நகரங்களில், நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற நிலங்களில் பாரம்பரிய கட்டிடங்களை தொடர்ந்து பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் பல்வேறு சிக்கல்களும் உள்ள நிலையில், அதுகுறித்த நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையில் ஒரு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.. பழைய பல்லாவரம் காந்திநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்ற நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது... அதாவது, தனிநபர் நிலத்தை ஆக்கிரமித்து, இந்த வீடுகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கண்ணீர் புலம்பல்: எனவே, இந்த வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப்பட்டது... இதைப்பார்த்த அந்த வீட்டு மக்கள் கண்ணீர்வடித்து கதறி அழுதனர்.. 50 வருடங்கள் வாழ்ந்து வந்த வீட்டை, இப்படி ஒரே இரவில் இடித்து விட்டார்களே என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க கூறியது காண்போரை கலங்கடித்தது..
10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் நடுரோரோட்டிலேயே குழந்தைகளுடன் பொதுமக்கள் தவித்து வருவதாகவும், வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications