Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருங்களத்தூர் பிஸி.. கிளாம்பாக்கம் திணறுது.. சொந்த ஊருக்கு கிளம்பிய மக்கள்.. சென்னை புறநகர் நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர்ப்பகுதிகளில் போக்குவரத்தில் நெரிசல் காணப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வதால், சாலைகளில் டிராபிக் பாதிப்பை காண முடிகிறது.

சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்தவாறே உள்ளது.. புதிய புதிய நிறுவனங்களின் எண்ணிக்கைகளும் பெருகிக் கொண்டே இருப்பதால், வேலை தேடி வருவோரின் எண்ணிக்கையும் சென்னையின் புறநகர்களில் பெருகி வருகிறது.

perungalathur kilambakkam bus stand

சென்னை: இதன்காரணமாக சென்னையில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இதனை தவிர்க்க நிறைய மேம்பாலங்களும், உயர்மட்ட பாலங்களும், கட்டப்பட்டிருக்கின்றன.. இதைத்தவிர, கூடுதலான உயர்மட்ட மேம்பாலங்களின் கட்டுமான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

எனினும், சென்னை நகருக்குள்ளேயே போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனால்தான், கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்டு, கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.. இதனால் சென்னைக்குள் நெரிசல் குறைந்தாலும், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் வாகன நெரிசல் முன்பைவிட இப்போது கூடுதலாகவே அதிகரித்துவிட்டது.

ஜிஎஸ்டி சாலை: ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டிருப்பதால், இதற்கான பணிகள் விரைவிலேயே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை:

சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலையில் 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் சமீபத்தில் அறிவித்திருந்தது.

எனினும் வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும், புறநகர் பகுதிகளில் டிராபிக் ஜாம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.. அதிலும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் நேற்று முன்தினம் முதலே புறப்பட தயாராகிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொது மக்கள் கூட்டம் காரணமாக பஸ்கள் நெரிசல் காணப்பட்டது..

நெரிசல்: அதேபோல, இதனால் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்ஸில் ஏற்கனவே புக் பண்ணி இருக்கேன், சீட் கிடைக்கவில்லை என்றெல்லாம் கிளாம்பாக்கத்தில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அதேபோல, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பொது மக்கள் அவதிக்கு ஆளாகினார்கள். பஸ்கள் மட்டும் அல்லாமல் ரெயில்களிலும் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது.

நேற்றிரவு கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளில், முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முக்கியமாக, கிளாம்பாக்கத்தில் நள்ளிரவு வரை பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பஸ்களில் முண்டியடித்து கொண்டு இடம் பிடிக்க செல்வதில் திணறினார்கள்.. அதேபோல, நேரம் செல்லச் செல்ல பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருந்ததால், பஸ்கள் இயக்கப்படவில்லை.. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினார்கள்..

அதேபோல, திருச்சி, தஞ்சாவூர்‌, ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இல்லை என‌க் கூறி போலீஸாருடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால், நள்ளிரவு ஒரு மணியை கடந்தும் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்தனர்.. இன்று விடிகாலையில்தான் பல பயணிகள் பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்ல முடிந்ததாக அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+