ரம்ஜான் பண்டிகையன்று புறநகர் ரயிலில் செல்கிறீர்களா! உங்களுக்கான அறிவிப்புதான் இது!
சென்னை: வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. சென்னையில் அன்றைய தினம் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுகிழமை அட்டைவணையின்படி இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
உலக அளவில் இந்தியன் ரயில்வே மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது. இந்தியன் ரயில்வேயில் புறநகர் ரயில் சேவை தனி பாரம்பரியம் கொண்டிருக்கிறது.

இவை பெருநகரங்களை இணைக்கிறது. வணிகமயமாக்களுக்கும், கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு விஷயங்களுக்கும் புறநகர் ரயில் சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. லோக்கல் ட்ரெயின்கள் என்று அழைக்கப்படும் இவை 1931ம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. 300க்கும் அதிகமான ரயில் நிலையங்களுடன் 1175 கி.மீ தொலைவுக்கு லோக்கல் ட்ரெயின்கள் பயணிக்கின்றன. இந்த ரயில்கள் 4 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
1. வடக்கு பாதை (Northern Line)
2. மேற்கு பாதை (Western Line)
3. தெற்கு பாதை (Southern Line)
4. MRTS (Mass Rapid Transit System)
இதில் வடக்கு பாதையை எடுத்துக்கொண்டால், சென்னை சென்ட்ரல் (MMC) முதல் சூலூர்பேட்டை (Sullurpetta) வரை 82 கி.மீ தொலைவுக்கு 46 நிலையங்கள் என ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய நிலையங்களாக பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி என ஆந்திரப் பிரதேச எல்லை வரை செல்கிறது.
மேற்கு பாதையை பொறுத்த அளவில், சென்னை சென்ட்ரல் முதல் திருத்தணி வரை 69 கி.மீ தூரத்திற்கும், மற்றொரு பிரிவு ஜோலார்பேட்டை வரை 135 கி.மீ தொலைவுக்கும் இயக்கப்படுகிறது. முக்கிய நிலையங்களாக அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் இருக்கிறது. இந்த வழித்தடம் தொழிற்சாலை பகுதிகளையும் இணைக்கிறது.
மூன்றாவதாக உள்ள தெற்கு பாதை சென்னை கடற்கரை (Chennai Beach) முதல் செங்கல்பட்டு வரை 60 கி.மீ தொலைவு 40 நிலையங்களுக்கு இயக்கப்படுகிறது. முக்கிய நிலையங்களாக சென்னை எழும்பூர், தாம்பரம், குரோம்பேட்டை இருக்கின்றன. இந்த வழித்தடம் தகவல் தொழில்நுட்ப மையங்களை இணைக்கிறது.
நான்காவது பாதை சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்கிறது. 19.34 கி.மீ நீளத்திற்கு 18 நிலையங்களை இந்த வழித்தடம் கவர் செய்கிறது. முக்கிய நிலையங்களாக பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகியவை இருக்கிறது.
அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 5-10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் 12 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை குறையும். இதனை கருத்தில் கொண்டு வரும் ரம்ஜான் பண்டிகைக்கு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications