சென்னை புறநகர் ஹேப்பி.. பெருமாள் கோயிலுக்கு போகணுமா? தமிழக அரசு ஆன்லைனிலேயே தந்த சர்ப்ரைஸ்.. சூப்பர்
சென்னை: பெருமாள் கோயில்களை தரிசிப்பதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.. இதுகுறித்த தொலைபேசி எண்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான கோவில்கள் உள்ள நிலையில் குறிப்பாக பெருமாள் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஒருநாள் சிறப்பு சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றது. இதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

சுற்றுலாத்துறை: இதுகுறித்து, தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஆணையரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனருமான சமயமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திவ்ய தேசம் பெருமாள் கோவில் ஒருநாள் சிறப்பு திட்டமானது திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திவ்ய தேசம் பெருமாள் கோயில் ஒருநாள் சுற்றுலா திட்டம், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
சுற்றுலா வளாகம்: இந்த திட்டத்தின்படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் சுற்றுலா பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள், சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மர், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
இன்னொரு பயண திட்டத்தில், வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருநீர்மலை நீர்வண்ண பெருமாள், திருமழிசை ஜகன்னாத பெருமாள், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
ஒருநாள் சுற்றுலா: இந்த ஒருநாள் சுற்றுலாவுக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக முன்பதிவு மையத்தில் நேரடியாக முன்பதிவு செய்யலாம்.
மேலும், சுற்றுலா வளர்ச்சிக் கழக இணையதளத்தின் (www.ttdconline.com ) வாயிலாக ஆன்லைனிலும் முன்பதிவு செய்ய முடியும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் (180042531111), 044-25333333,044-25333444 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இப்படி ஒரு நாள் சிறப்பு சுற்றுலாத் திட்டத்தின் மூலம் பெருமாள் கோவில்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications