சென்னையில் சுஜாதாவுக்கு வந்த ஸ்பெஷல் பால்கோவா.. சபலம் தந்த விளையாட்டு.. 27 சவரன் தங்க நகையும் போச்சே
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த ஒரு வினோதமான திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த பெண் கொள்ளைக்காரியாக எப்படி மாறினார் ? என்பதை கேட்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது சென்னையில்?
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, கோயில் பிரசாதம் என கூறி மயக்க பால்கோவா கொடுத்து நகைகளை திருடிய பெண், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவை சேர்ந்தவர் மாலத்திரி.. இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா வீட்டிலேயே டெய்லரிங் செய்து வருகிறார்.
ஸ்பெஷல் பால்கோவா
கடந்த 7ம் தேதி மாலத்திரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, சுஜாதா மயக்க நிலையில் படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தண்ணீர் தெளித்து எழுப்பிய என்ன நடந்தது? கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க நகை எங்கே? என்று விசாரித்தார்..
அதற்கு சுஜாதா, தனக்கு தெரிந்த பெண் ஒருவர் கோயில் பிரசாதம் என பால்கோவா தந்ததாகவும், அந்த பால்கோவாவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே என்ன நடந்தது என தெரியாமல் மயங்கி விட்டதாகவும் பதற்றத்துடன் கூறினார்.
இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த மாலத்திரி ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே ஓடிச்சென்று புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசாரும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
6 சவரன் தங்க நகை
அப்போதுதான் ஆந்திரா ரவணம்மா சிக்கினார்.. திருவல்லிக்கேணி அரிசி மண்டி தெருவை சேர்ந்த ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர்தான் இந்த நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது...
இதையடுத்து போலீசாரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது ரவணம்மா ஆந்திராவை சேர்ந்தவராம்.. 34 வயதாகிறது.. 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து சென்னை வந்துவிட்டார்..
ஆனால், ரவணம்மாவுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அதிக பிரியமாம்.. எப்போது பார்த்தாலும் விளையாடி கொண்டே இருந்துள்ளார்.. கடைசியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டார்.. இழந்த பணத்தை மீட்க அவர் பல இடங்களில் பணம் கடன் கேட்டுள்ளார். ஆனால் யாரும் பணம் தரவில்லை.
இதற்கு பிறகுதான், நூதன முறையில் மோசடி செய்து, நகை, பணத்தை திருடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.. இதற்காக ரவணம்மா கையில் எடுத்த ஆயுதம்தான், பால்கோவா..
கொடியரசி - ரவணம்மா
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு, கோயில் பிரசாதம் என்று சொல்லி மயக்க மருந்து கலந்த பால்வோகாவை தருவாராம்.. அப்பெண்களும் கோயில் பிரசாதம் என்று பயபக்தியுடன் வாங்கி சாப்பிட்டதுமே, அவர்கள் அணிந்துள்ள நகைகளை திருடிவிடுவார் ராவண்ணா..
அப்படித்தான் திருவல்லிக்கோணி பகுதியை சேர்ந்த கொடியரசி என்பவரிடமும், ரவணம்மா 21 சவரன் நகைகள் திருடியிருக்கிறார்.. இவ்வளவம் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் அதிரடியாக ரவணம்மாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து 19.5 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது..
இதுபோல் வேறு பெண்களிடம் நகைகள் பறித்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை சென்னை போலீஸ்
அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து உணவு பொருட்கள் வாங்க வேண்டாம், யாராக இருந்தாலும் வீட்டிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு நன்றாக விசாரிக்க வேண்டும், கோயில் பிரசாதம், மருந்து, இனிப்பு போன்றவற்றை அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து வாங்க கூடாது. குழந்தைகள், முதியவர்கள் தனியாக இருக்கும் நேரங்களில் கூடுதல் கவனம் தேவை... சந்தேகமான நபர்கள் தெருவில் நடமாடினால் உடனே போலீஸ் தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்..
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications