அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் மீது பொய் வழக்கு.. சென்னை தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.11 அபராதம்
சென்னை: கடந்த 13.7.2019 அன்று அறப்போர் இயக்கத்தின் தன்னார்வலர்கள் 11 பேர், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கும் வகையில் அரசுக்கு பரிந்துரைக்க ஏதுவான ஆய்வுப் பணிக்கு சென்றவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தமிழகத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சென்னை தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கு ரூ.11 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "கடந்த 13.7.2019 அன்று அறப்போர் இயக்கத்தின் தன்னார்வலர்கள் 11 பேர், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கும் வகையில் அரசுக்கு பரிந்துரைக்க ஏதுவான ஆய்வுப் பணிக்காக, சென்னை தரமணி பகுதியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை பார்வையிட சென்றனர். ஆனால் பல்வேறு காரணங்களை போலீசார் மனதில் கொண்டு, தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக திருமண மண்டபத்தில் அப்போது அடைத்து வைத்தனர்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அப்போதைய தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தன்னார்வலர்களுக்கு இழப்பீடாக தலா ஒரு ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்' இவ்வாறு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், 'மனுதாரர் விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெரிகிறது. எனவே, மனுதாரர் கோரியபடி அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் 11 பேருக்கு தமிழக அரசு இழப்பீடாக தலா ரூ.1 வீதம் மொத்தம் ரூ.22 (இரு எதிர்மனுதாரர்களுக்கும் சேர்த்து) வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த இழப்பீட்டு தொகையை இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோரிடம் இருந்து தலா ரூ.11 வீதம் தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications