உடம்பு முழுக்க மின்சார ஒயர்.. ஓவர் வேலையால் சென்னை ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு! அலறிய மனைவி
சென்னை: தலைநகர் சென்னையில் 38 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக இரண்டு மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். மனைவி வெளியூர் சென்றிருந்த நேரம் பார்த்து அந்த இளைஞர் பரிதாபமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் ஒர்க் பிரஷர் என்பது அதிகரித்து வருகிறது. உயர்ந்த சம்பளம் வாங்கும் வேலையில் இருந்தாலும் சரி, குறைந்தபட்ச சம்பளமாக இருந்தாலும் சரி ஒர்க் பிரஷர் அதிகமாகவே இருக்கிறது.

ஒர்க் பிரஷர்: பல நேரங்களில் இந்த ஒர்க் பிரஷரை இளைஞர்களால் சமாளிக்கவே முடிவதில்லை. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு சில மோசமான முடிவுகளையும் எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 38 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் பரிதாபமாகத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சாப்ட்வேர் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து வந்தார். இருப்பினும், அதீத வேலை காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
வீட்டில் யாரும் இல்லை: சம்பவம் நடந்த திங்கள்கிழமை கார்த்திகேயன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி ஜெயராணி குழந்தைகளைத் தாய் வீட்டில் விட்டுவிட்டு திருநல்லூர் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் சுவாமி தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு வியாழக்கிழமை இரவு அவர் வீடு திரும்பியுள்ளார்.
தற்கொலை: வீட்டிற்கு வந்தவுடன் வழக்கம் போலக் கதவைத் தட்டியுள்ளார். இருப்பினும், யாரும் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியை வைத்துக் கொண்டு உள்ளே கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டில் உள்ள கண்ட காட்சி அவரை உறைய வைத்துவிட்டது. உடம்பு முழுவதும் மின்சார ஒயர் சுற்றப்பட்ட நிலையில், கார்திகேயன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரே தனது உடலில் ஒயரை சுற்றிக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே இளம் பெண்: புனேவில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளம்பெண் ஒருவர் ஒர்க் பிரஷர் காரணமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தாய் எழுதிய கடிதம் நாடு முழுக்க பேசுபொருள் ஆனது. மத்திய அரசும் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில் சென்னையிலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!












Click it and Unblock the Notifications