தொழிலுக்கு புதுசு.. சிசிடிவியில் சிக்கிய “சிரிப்பு” திருடன்! சென்னையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு
சென்னை: அம்பத்தூரில் உள்ள ஒரு மளிகை கடையில் கொள்ளை அடிப்பதற்கு முன் சிசிடிவி கேமராவில் பதிவான திருடர்களின் செயல் காண்போருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் ஒன்றில் நள்ளிரவு திருடர்கள் இருவர் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். இந்த இருவரும் கொள்ளை அடிப்பதற்கு முன்பாக கடையின் பூட்டை உடைக்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளனர். இருவரும் பூட்டை உடைப்பதற்கு படும் பாடு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த காட்சி தற்போது வெளியாகி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் கடையில் திருட வந்த ஒருவர் மளிகை கடை க்கு இரும்பு கம்பி எடுத்து வருகிறார். இதனை கொண்டு மளிகை கடை பூட்டை உடைக்க அந்த நபர் முயற்சி செய்கிறார்.
அப்பொழுது அவ்வழியே யாரோ ஒருவர் வந்துவிட அங்கிருக்கும் ஒரு தடுப்பின் பின்னால் மர்ம ஓடி ஒளிந்து கொள்கிறார். பின்னர் அவர் எழுந்து பார்த்துவிட்டு மீண்டும் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் பூட்டை உடைக்க முடியவில்லை.
மீண்டும் அந்த பக்கம் ஆள்நடமாட்டம் தென்படவே சிறுத்தையை கண்டதும் தங்களை தற்காத்து கொள்ள கால்நடைகள் பதுங்குவது போன்று அங்கிருந்த உப்பு மூட்டைகளின் பின்னால் சென்று பதுங்கி படுத்து கொள்கிறார்.
இதன் பின்னர் அவரது மற்றொரு கூட்டாளி அங்கு வந்தவுடன் பூட்டை உடைத்து மளிகை கடை உள்ளே சென்று கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications