சென்னை திருவொற்றியூரில் இப்படி ஒரு வாய்ப்பு... பெண்களே மிஸ் பண்ணாதீங்க!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூரில் இருக்கும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் வீ. கவி கணேசன் உதவி வருகிறார். பெண்கள் தயாரித்துக் கொடுக்கும் மாஸ்க்கை இவரே வாங்கிக் கொள்கிறார். அதன் மூலம் பெண்களுக்கு வருமானம் கிடைக்க வழி செய்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் வேலைகளை இழந்து வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதைப் போக்க 100 நாள் வேலை திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்து இருந்தது. ஆனால், அந்த திட்டத்தில் அனைவருக்கும் தினமும் வேலை கிடைப்பதில்லை.

Chennai thiruvottiyur women can use this opportunity to stitch mask

வேறு பணிகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்களில் பணிபுரிபவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் பஞ்சு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதால், இடை இடையே வேலை வாய்ப்பு இழக்கின்றனர். நல்ல வேலைக்கு சென்று கொண்டு இருந்தவர்களும் இன்று கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் திருவொற்றியூரைச் சேர்ந்த தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளர் வீ.கவி கணேசன் 'நலமான திருவொற்றியூர்' என்ற திட்டத்தை துவக்கியுள்ளார். தையல் இயந்திரம் வைத்து இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

கொரோனாவில் இருந்து மீள்வதற்கு, பாதுகாப்பதற்கு மாஸ்க் மிகவும் அவசியமாகிறது. எனவே பெண்கள் மாஸ்க் தயாரிக்கலாம் என்று கவி கணேசன் தெரிவித்துள்ளார்.

மாஸ்க் தயாரிக்க துணி வேண்டும், வெளியே சென்று வாங்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. அவர்கள் தங்களது பெயர் முகவரிகளை பதிவு செய்து கொண்டால், பெண்களின் வீட்டை தேடி அதற்கான பொருட்கள் வந்து சேரும். மாஸ்க் தயாரித்த பின்னர் குறிப்பிட்ட விலை கொடுத்து நலமான திருவொற்றியூர் திட்டத்தினர் வாங்கிக் கொள்கின்றனர்.

அப்படி தயாரிக்கப்படும் மாஸ்க் அனைத்தும் திருவொற்றியூர் மக்களுக்கே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 99941 04374 என்ற தொலைபேசி எண்ணை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+