இதெல்லாம் வேற லெவல்.. ஸ்பாஞ்ச் சிட்டியாக மாறும் சென்னை.. ஸ்டாலினின் கனவு பிளான்.. என்ன சிறப்பு?
பி - ஸ்பாஞ்ச் சிட்டி உருவாக்கப்படும் பட்சத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீர் மட்டம் வேகமாக உயரும் என்று கூறப்படுகிறது.
சென்னை: சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக உருவாக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளதாக மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும். ஆனால் தற்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க வெள்ள நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளன.
சாலை ஓரங்களில் பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர் .முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வெள்ளம் இல்லை
இதனால் கடந்த நவம்பர் - டிசம்பர் மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது.தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. அதன்படி பொதுவாக மழை பெய்தால் 2 - 3 மணி நேரம் தண்ணீர் தேங்கும் சாலைகளில் உடனே மழை நீர் வடிந்துவிட்டது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலையை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் நினைத்ததை விட வேகமாக வடிந்துவிட்டது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர்.

ஸ்பாஞ்ச் சிட்டி
இந்த நிலையில்தான் சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருக்கும் பொது இடங்களை, திறந்தவெளி பகுதிகளை ஸ்பாஞ்ச் பகுதிகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதாவது திறந்தவெளி பகுதிகள் ஸ்பான்ச் போல மாற்றப்படும். அதற்கான கற்கள், சாலை அமைப்புகள், பூங்கா போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இங்கே வெள்ளநீர் குழாய்களை அமைக்க வேண்டியது இல்லை. மாறாக மழை பெய்தால் தானாக இந்த பகுதிகள் தண்ணீரை உறிஞ்சி பூமிக்கு அனுப்பிவிடும்.

கடற்பாசி
முதல் கட்டமாக ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க உள்ளார். கடற்பாசிகள் மூலம் இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்களை முதல் கட்டமாக அமைக்க உள்ளனர். வித்தியாசமான கட்டுமானம் மூலம் தரைப்பகுதி வேகமாக தண்ணீரை உறிஞ்சும் வசதியை ஏற்படுத்த உள்ளனர். 57 பூங்காக்களை தேர்வு செய்து அதில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.மாத்தூர், எம்எம்டிஏ, திருவெற்றியூர் உள்ளிட்ட 5 இடங்களில் இருக்கும் பூங்காக்களை முதல் கட்டமாக தேர்வு செய்து ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க உள்ளனர். இயற்கையாக தண்ணீரை உறிஞ்சி அது பூமிக்கு கீழ் தண்ணீரை அனுப்பும். இதற்காக 7 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிறிய பூங்காக்கள்
அதேபோல் இந்த பூங்காக்கள் உள்ளேயே சிறிய குளங்கள், அகழிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த பகுதிகளுக்கு வெள்ளநீர் குழாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் பூங்கா உள்ளே குளிர்ச்சியாக குளங்களும் இருக்கும். தண்ணீரும் மழை காலத்தில் எளிதாக வெளியேறும். இதனால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வரும் காலத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 57 பூங்காக்களை தேர்வு செய்து அதில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications