இனி சென்னையே கூல் ஆகப் போகுது! மார்ச் முதல் புறநகர் ஏசி ரயில்! ஒரே நேரத்தில் எத்தனை பேர் போகலாம்?
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி ரயில்களாக அவற்றை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில். மார்ச் முதல் அவை இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைக்கு ஒரே நேரத்தில் 5000 பேர் வரை பயணிக்கலாம். மும்பையைப் போல ஒன்பது கிலோமீட்டருக்கு 35 ரூபாய் என்ற விகிதத்தில் 95 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். 5 ரூபாய் கட்டணத்தில் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஆகும். இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்கேற்ப ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை அடுத்து சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஐசிஎஃப் என அழைக்கப்படும் இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை உலகின் அதிக ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 3,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர், எல்எச்டி ரயில் பெட்டிகள், தேஜஸ் ரயில், அம்ரித் பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் இங்கு தயாராவது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிருந்து பல ரயில் பெட்டிகள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அங்கு ஏசி மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இம்மாத 3வது வாரத்தில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
மும்பை புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களை இயக்க வசதியாக ஐசிஎப் ஆர்டர் பெற்று இருந்த நிலையில் சென்னைக்கும், ஒரு ரயில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இம்மாத இறுதிக்குள்ளாக சோதனை ஓட்டம் நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை 95 ரூபாய் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மும்பையில் ஒன்பது கிலோ மீட்டருக்கு 35 ரூபாய் என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதே கட்டணம் தான் சென்னைக்கும் நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை அமர்ந்து கொண்டும், 5000 பேர் வரை நின்று கொண்டும் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications