நம்பர் 12.. சென்னையில் நடக்க போகும் அதிசயம்.. இப்படியே போனால் எந்த சிட்டியும் நெருங்க கூட முடியாது!
சென்னை: சென்னைக்கான 12வது சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டியில் உள்ள சூரப்பூண்டியில் 534 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் புதிய டவுன்ஷிப் மற்றும் தொழிற்பேட்டை அமைக்க உள்ளது. Voltas ஏற்கனவே 1,000 Crs A/C உற்பத்தி ஆலையை அங்கு நிறுவுகிறது.
மணல்லூர் சிப்காட்டில் எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கிளஸ்டருக்கான (EMC) சாலைகள், தெரு விளக்குகள், வடிகால் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சிப்காட் தற்போது டெண்டர்களை அழைத்துள்ளது. இது எண்ணூர் & காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு மிக அருகில் இருக்கும். இதை தொடர்ந்து அங்கே சிப்காட் பணிகள் வேகமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சென்னை, கோவை மட்டும் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது பல சிறிய மாவட்டங்கள், 3 டயர் சிட்டிகளில் சிப்காட் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.

அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது:
1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர்
2. சென்னை ORR - 200 ஏக்கர்
3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
4. பெரம்பலூர்- 100 ஏக்கர்
5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர்
6. கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
7. அரியலூர்- 150 ஏக்கர்
8. மன்னார்குடி- 150 ஏக்கர்

அடிக்கல் நாட்டு விழா: இது போக தமிழ்நாட்டில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 6,035 ஏக்கரில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. விருதுநகர்
2. தருமபுரி
3. தேனி
4. சிவகங்கை
5. தூத்துக்குடி (வைப்பார்)
6. ராமநாதபுரம்-1
7. ராமநாதபுரம்-2
ஆகிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க்: ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications