சென்னையில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு.. ரூ.5000 அபராதம் கட்ட வேண்டாம்! இதை செய்யுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாய் கடி தொல்லை பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கும் நிலையில், இனி சென்னையில் நாய் வளர்ப்போர் அதற்கான உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிமம் எளிதாக கிடைப்பதில்லை என்று நாய் வளர்ப்போர் குற்றம் சாட்டிய நிலையில், உரிமம் வழங்க இன்று 6 இடங்களில் மாநகராட்சி சிறப்பு முகாம்களை அமைத்திருக்கிறது.

தெருநாய் கடி பிரச்சனை ஒருபுறம் எனில், வளர்ப்பு நாய்களின் தொல்லை அதைவிட அதிகமாக இருக்கிறது. அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களை பார்த்துவிட்டும், இன்ஸ்டா ரீல்ஸில் நாய்களின் க்யூட்டான வீடியோக்களை பார்த்துவிட்டும், நாய்களை வாங்கி வளர்க்கும் போக்கு அதிகமாகவே இருக்கிறது.

dog tamil nadu

அதுகூட பரவாயில்லை, நான்தான் பயங்கரமான நாயை வைத்திருக்கிறேன் என கெத்துக்காக நாய்களை வளர்ப்பது முற்றிலும் தவறானது என்றே விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்படி ஆர்வக்கோளாறில் நாய்களை வாங்குபவர்கள் அதை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், நாளடைவில் அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுகின்றனர். இப்படி கவனிப்பு இல்லாமல் விட்டுவிடப்படும் வளர்ப்பு நாய்கள், காலை கடனை கழிப்பதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு இறுக்கமான சூழலில் வளர்வதால் நாய்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழத்து வெறி பிடித்ததை போல மாறிவிடுகின்றன. அதன் வெளிப்பாடுதான் ஓனரை தாக்குவது, சிறார்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, இனி நாய்களை வளர்ப்போர் அதற்கான உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நாய்களை வளர்ப்போர் தங்கள் முழு விவரங்களை செல்போன் செயலியில் பதிவிட்டு, வளர்ப்பு நாயின் புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். ரேபிஸ் தடுப்பூசி ஆய்வுக்கு பின்னர், உரிமம் வழங்கப்படும். உரிமம் வழங்கப்படும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

உரிமம் பெற ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி நவ.24ம் தேதி முதல் உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போருக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்க சென்னையில் 6 இடங்களில் மாநகராட்சி சார்பில் இன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கத்தில் முகாம்கள் இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முகாம்களில் நாய்களுக்கு உரிமம் வழங்குவதுடன் மைக்ரோசிப் பொருத்தி தடுப்பூசி போடப்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

எனவே வளர்ப்பு நாய்களை வைத்திருப்போர் உடனடியாக இந்த முகாம்களில் பங்கேற்று தங்கள் நாய்களுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ரூ.5000 அபராதத்தை தவிர்க்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+