சென்னையில் ஓப்பன் ரூப் டாப் பஸ்கள்! அசத்தும் போக்குவரத்து கழகம்.. வேடிக்கை பார்த்துட்டே ரைட் போலாம்
சென்னை: சென்னையில் பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ரூப் டாப் ஓப்பன் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளியாக கொண்ட வடிவமைப்புடன் கூடிய பேருந்தை இயக்க போக்குவரத்து முடிவு செய்துள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டுமகிழ சென்னை உலா என்ற சுற்றுலாப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் திறந்தவெளி பேருந்துகள்
மெரினா கடற்கரை, எழும்பூர் அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க ஏதுவாக இந்த உலா பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் தனியார் நிறுவன பங்களிப்புடன் இணைந்து மின்சார பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான், பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ரூப் டாப் ஓப்பன் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளியாக கொண்ட வடிவமைப்புடன் கூடிய பேருந்தை இயக்க போக்குவரத்து முடிவு செய்துள்ளது.
20 இரட்டை அடுக்கு ஏசி மின்சார பேருந்துகள்
இதற்காக ஒப்பந்தத்தில் திருத்தமும் முன்மொழியப்பட்டுள்ளதாம். அதாவது, 20 இரட்டை அடுக்கு மின்சார ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அதில் 16 ஏசி மின்சார பேருந்துகளும் 4 நான் ஏசி ரூப் டாப் பஸ்களையும் வாங்க ஒப்பந்தம் திருத்தப்பட்டுள்ளது.
நகரின் போக்குவரத்து சேவையை பிரிமீயம் ஆக்குவதோடு, மின்சார சேவைகளாக மாற்றும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது. திருத்தப்பட்ட ஒப்பந்த முன்மொழிவுப்படி ஒப்பந்த காலம் 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 4,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்தம் போடப்படும்.
ஓப்பன் டாப் பேருந்துகள்
ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் பஸ் ஆபரேட்டர்களுக்கு பணம் வழங்கப்படும். பேருந்துகளை இயக்குவது மட்டும் இன்றி பராமரிப்பு, சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாகுதல் ஆகியவையும் ஆபரேட்டர்களின் பொறுப்பேயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் முதலில் வெளியிடப்பட்ட நிலையில், அதை மாற்றம் செய்து நடப்பு மாதம் மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
முதலில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் டபுள் டெக்கர் மின்சார பேருந்துகள் மட்டுமே திட்டமிட்டு இருந்தன. ஏசி பேருந்துகளுக்கு ஒரு கட்டணமும் ஓபன் டாப் பேருந்துகளுக்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. விரைவில் லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள நகரங்களில் காணப்படும் ஓப்பன் டாப் பேருந்துகள் சென்னை சாலையிலும் வலம் வர இருக்கின்றன.
சென்னை அழகை ரசித்தபடி பயணிக்கலாம்
இவற்றில் ஏறி சென்னையின் அழகை கண்டு ரசித்தபடியே பயணிகள் பயணத்தை தொடர முடியும். சென்னையில் தற்போது உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு அரசின் Chennai City Partnership திட்டத்தின் கீழ், மாநகரப் போக்குவரத்துக் கழகம் பேருந்து சேவைகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஒப்பந்த அடிப்படையில், மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து முதலில் 1970 ஆம் ஆண்டு அறிமுகம் சேய்யப்பட்டது. பின்னர் 1980 களில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 1997 ஆம் ஆண்டு மீண்டும் இந்த பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2008 ஆம் ஆண்டு மீண்டும் சேவை நிறுத்தப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications