சென்னை டூ பரந்தூர் 15 நிமிடத்தில் போகலாம்.. வேற லெவலில் மாறப்போகுது போக்குவரத்து சிஸ்டம்? செம பிளான்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில், ஹைப்பர் லூப் ரயில் சோதனை திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் ஐஐடி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ரூ.32,704.92 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஹைப்பர் லூப் ரயில்: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது விமான நிலையம் உள்ள நிலையில், பரந்தூரிலும் ஒரு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரந்தூர் விமான நிலையத்திற்கு பயணிகள் செல்லும் வகையில், பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
15 நிமிடத்தில் செல்லலாம்: இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை ஹைப்பர் லூப் தொழில் நுட்பம் கொண்ட அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டத்தை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் வரும் 2035 ஆம் ஆண்டிற்குள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு வெறும் 15 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.
எப்படி சாத்தியம்?: இந்த ஹைப்பர் லூப் தொழில் நுட்பம் என்பது வெற்றிடமான ஒரு குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் மின்னல் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் இருக்கும். இதில் அமர்ந்து பயணிகள் பயணிப்பார்கள். காந்த அலைகள் மூலம் இந்த வாகனம் பயணிக்கும். ஒரே நேரத்தில் 40 பேர் இதில் பயணம் செய்யலாம். இந்த அதிவேக ஹைப்பர் லூப் டெக்னாலஜியை ரயிலை சாத்தியப்படுத்துவது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
விமானத்திற்கு இணையான வேகம்: அதுமட்டும் இன்றி சென்னை துறை முகம் மற்றும் அருகில் உள்ள முக்கிய தொழிற்பகுதிகளை இணைக்கும் விதமாக ஹைபர் லூப் தொழில்நுட்பம் கொண்ட ரயிலை இயக்குவது தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும் இதை செயல்படுத்த ஆர்வம் காட்டுகிறார்களாம். குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஹைபர் லூப் ரயில், டிராக்குகள் எதுவும் தேவைப்படாது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications