பல மணி நேரம் மிச்சம்.. ஜாலியா பறக்கலாம்! தஞ்சாவூர், நெய்வேலிக்கு அடுத்த மாதம் முதல் விமான சேவை!
சென்னை: தஞ்சாவூர், நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என தனியார் விமான நிறுவனமான ஏர் டாக்ஸி அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனமான ஏர் டாக்ஸி அறிவித்துள்ளது. சிறு நகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து சென்னைக்கு முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறு ரக விமான சேவை தொடங்கப்படுகிறது. அதேபோல, நெய்வேலியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை - சென்னை விமான சேவை பின்னர் பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த விமான சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன் பெறலாம்.
இதேபோல, நெய்வேலியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில், பழுப்பு நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகியவை உள்ளன. கடந்த 1987ஆம் ஆண்டு சென்னையில் இருந்து நெய்வேலிக்கு விமானம் விட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. அதையடுத்து குட்டி ரக விமானங்களை விட அரசு ஒப்புதல் அளித்தது. அதற்காக நெய்வேலி டவுன்ஷிப் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கும், நெய்வேலிக்கும் இடையே கடந்த 1987ஆம் ஆண்டு சிறு ரக விமான போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் இருந்து நெய்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் குட்டி விமானம் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வெறும் 45 நிமிட பயணம் என்பதால், வசதி படைத்த பலர் குட்டி விமானத்தில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். கார், பஸ் உள்ளிட்டவற்றில் பயணிப்பதை விட விமானத்தில் பயணிப்பதால் சுமார் 4 மணி நேரம் மிச்சமானது என்பதால் பலரும் ஆர்வம் காட்டினர்.

சென்னை - நெய்வேலி சிறு ரக விமானத்தில் 19 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். அப்போது ஒரு நபருக்கு கட்டணமாக 215 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த விமான போக்குவரத்து நாளடைவில் மக்கள் பயணிக்க ஆர்வம் காட்டாததாலும், வருமான இழப்பு ஏற்பட்டதாலும் குறுகிய காலத்திலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர், கடந்த பல ஆண்டுகளாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர், மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெய்வேலி, சேலம், ஓசூர் பகுதிகளில் இருந்து விமான சேவையை தொடங்க மத்திய அரசுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. மேலும் 1,200 மீட்டர் ஓடுதளம், சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட கட்டுமான பணிகளும் நடைபெற்றது.
இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகும், விமான சேவை செயல்படுத்தப்படவில்லை. நெய்வேலி விமான நிலையம் ஓரிரு மாதங்களில் இயங்க தொடங்கும் என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருந்தார். இந்நிலையில், உதான் திட்டத்தில் நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறு ரக விமானம் சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications