திருச்செந்தூர் போறவங்களுக்கு இனி நிம்மதி.. மொத்தமாக மாறும் பயணங்கள்.. ரயில்வே குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணநேரம் 1 மணி நேரம் குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த ரயிலின் புறப்பாடு வருகை நேரம் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் மாறி உள்ளது.

மதுரை-தூத்துக்குடி இடையே அகல ரயில் பாதை பணிகளை தெற்கு ரயில்வே வேகப்படுத்தியதால் கடந்த ஜனவரி மாதம் இப்பணிகள் முடிந்தது- இதையடுத்து, அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 1ந்தேதி முதல் திருநெல்வேலி திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

செந்தூர் எக்ஸ்பிரஸ்

செந்தூர் எக்ஸ்பிரஸ்

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை எழும்பூர் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16105) திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான ரயில் நிலையங்களுக்கு வரும், புறப்படும் நேரம் வருகிற 31ந்தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலிக்கு காலை 5.55 மணிக்கு வந்து 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 4.55 மணிக்கு வந்து 5 மணிக்கும், செய்துங்கநல்லூருக்கு 6.19 மணிக்கு வந்து 6.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.17 மணிக்கு வந்து 5.18 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கு 6.29 மணிக்கு வந்து 6.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.31 மணிக்கு வந்து 5.32 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

இதேபோல, நாசரேத்துக்கு 6.42 மணிக்கு வந்து 6.43 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.42 மணிக்கு வந்து 5.43 மணிக்கும், குரும்பூருக்கு 6.50 மணிக்கு வந்து 6.51 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.49 மணிக்கு வந்து 5.50 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 6.57 மணிக்கு வந்து 6.58 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.55 மணிக்கு வந்து 5.56 மணிக்கும், காயல்பட்டினத்துக்கு 7.04 மணிக்கு வந்து 7.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.59 மணிக்கு வந்து 6 மணிக்கும் புறப்படும். திருச்செந்தூருக்கு காலை 8 மணிக்கு செல்வதற்கு பதிலாக காலை 6.50 மணிக்கு சென்றடையும். இதன் மூலமாக பயணிகளுக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் குறையும்.

சென்னை ரயில்

சென்னை ரயில்

இதேபோல, ஏப்ரல் 1ந்தேதி முதல் திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16106) இரவு 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் பின்னதாக 8.10 மணிக்கு புறப்படும். காயல்பட்டினத்துக்கு 7.19 மணிக்கு வந்து 7.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.17 மணிக்கு வந்து 8.18 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 7.25 மணிக்கு வந்து, 7.26 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.20 மணிக்கு வந்து 8.21 மணிக்கும், குரும்பூருக்கு 7.32 மணிக்கு வந்து 7.33 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 8.26 மணிக்கு வந்து 8.27 மணிக்கும், நாசரேத்துக்கு 7.42 மணிக்கு வந்து 7.43 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.35 மணிக்கு வந்து 8.36 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கு 7.54 மணிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.45 மணிக்கு வந்து, 8.46 மணிக்கும், செய்துங்கநல்லூருக்கு 8.07 மணிக்கு வந்து 8.08 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.54 மணிக்கு வந்து 8.55 மணிக்கும், திருநெல்வேலிக்கு 9.10 மணிக்கு வந்து 9.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் மூலம் ஒரு மணி நேரம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதிகரிப்பு

அதிகரிப்பு

மேலும், திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. பாலக்காடு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16731) 30 நிமிடம் வேகமாகவும், மணியாச்சி திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (06679) 15 நிமிடம் வேகமாகவும், திருச்செந்தூர் மணியாச்சி எக்ஸ்பிரஸ் (06680) 20 நிமிடம் வேகமாகவும், திருச்செந்தூர் பாலக்காடு (16732) 15 நிமிடம் வேகமாகவும் இயக்கப்பட உள்ளது" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+