வேறொருவரை மாட்டிவிட நினைத்து சிக்கிய இளைஞர்! சென்னை போலீசின் ஒற்றை கேள்வி இதுதான்! இப்போ ட்ரெண்ட்
சென்னை: சென்னை முகப்பேரில் புல்லட் பைக்கில் விதிமீறிய நம்பர் பிளேட்டுடன் ஒருவர் சென்றதாக அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு நடவடிக்கை கோரிய நபருக்கு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பதில் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நபர் போலீஸ் கேள்விக்கும் சளைக்காமல் பதிலளித்து அசத்திய நிலையில் இந்த பதிவு கவனத்தை ஈர்த்தது.
சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதோடு, வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதுதவிர சாலைகளில் போக்குவரத்து வாகனங்களை மீறுவோர் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் சென்னை மாநகர போலீசாரிடம் பலரும் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார்களின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து விதிமீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் Dhineash (தினேஷ்) என்ற ட்விட்டர் பயனாளர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ராயல் என்பீல்ட் பைக்கை 2 ஆங்கிளில் போட்டோ எடுத்து பதிவிட்டார். அதில் வாகன பதிவெண் மிகவும் தெளிவாக தெரிகிறது. இந்த பதிவில், ‛‛இது உண்மையில் அனுமதிக்கப்படுகிறதா? இடம் முகப்பேர் கிழக்கு பாரி ஸ்ரீட்'' என எழுதி சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்திருந்தார். அதாவது மோட்டார் சைக்கிளில் பதிவெண் பலகை விதிகள் படி எழுதவில்லை என்பதை தான் அவர் அப்படி கூறி இருந்தார்.
இந்த பதிவுக்கு உடனடியாக சென்னை போக்குவரத்து போலீசார் ‛ரெஸ்பான்ஸ்' செய்தனர். தான் போட்டோ எடுத்து போட்ட ராயல்ட் என்பீல்டு மீது நடவடிக்கை எடுத்ததாக கூறுவார்கள் என நினைத்தபோது தான் போலீசார் ட்விஸ்ட் வைத்தனர். அதாவது புகார் அளித்த நபரை, ‛‛தினேஷ், நீங்கள் வாகனம் ஓட்டியபோது செல்போன் பயன்படுத்தினீர்களா?'' என கேள்வி கேட்டனர்.
இதற்கு புகாரளித்த நபர், ‛இன்னும் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் படம் ஜூம் செய்யப்பட்டது. 2வது படத்தில் எனது டீசர்ட்டை படத்தின் கீழ் பகுதியில் காணலாம். மேலும் இந்த போட்டோ பில்லியன் ரைடர்(பின்இருக்கையில் அமர்பவர்) மூலம் எடுக்கப்பட்டது'' என்றார். இதையடுத்து சென்னை போக்குவரத்து போலீசார், ‛‛உங்களின் விளக்கத்துக்கு நன்றி. இது விதிமீறிய நம்பர் பிளேட்'' என குறிப்பிட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications