பத்த வச்சுட்டியே பரட்டை.. ஒரே போட்டோ.. போலீசுக்கே ஆப்பு வச்ச நெட்டிசன்.. வீட்டுக்கே பறந்த பைன்
சென்னை : ஹெல்மெட் போடாமல் சென்னை ஜெமினி பிரிட்ஜ் சாலையில் காவலர் ஒருவர் சிக்னலில் சென்று கொண்டிருந்தார். இதை போட்டோ எடுத்து அதனை சென்னை போக்குவரத்து போலீசுக்கு டேக் செய்தார். அந்த காவலருக்கு பைன் கட்ட சொல்லி வீட்டுக்கே நோட்டீஸ் பறந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே பலரும் இருக்கிறார்கள்
குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லையே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் பல இடங்களில் ஹெல்மெட் போடுவது இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்து செல்வது நடக்கிறது.

பல இளைஞர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து செல்வார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள்.
சிக்னல் விழப்போகிறது என்றால், பாய்ந்து சென்று சிவப்பு சிக்னல் விழுந்தாலும் ஏறி செல்வார்கள். குறைந்தது 20 வினாடிக்கு பிறகே பச்சை சிக்னல் விழுந்தவர்கள் செல்ல முடியும். இதெல்லாம் இங்க சர்வ சாதாரணம். முக்கியமாக பள்ளிக்கு குழந்தையைவிட போகும் பெற்றோர், ஹெல்மெட் அணிவதை பார்க்கவே முடியாது. பக்கத்து தெருவிற்கு செல்வதாக இருந்தாலோ, வீட்டு பக்கத்தில் எங்காவது செல்வதாக இருந்தாலோ பலரும் ஹெல்மெட் போடுவதே இல்லை.
சென்னையில் இப்படிப்பட்ட போக்குவரத்து விதிகளை முடிவுக்கு கொண்டுவர போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெட்டிசன்கள் துணையுடன் இந்த நடவடிக்கையை போலீஸ் எடுத்து வருகிறது. யாராவது இடம், நேரத்துடன் போக்குவரத்து விதிமீறல் குறித்து புகைப்படம் எடுத்து அனுப்பினாலோ அல்லது வீடியோ எடுத்து அனுப்பினாலோ, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அபராதமும் விதிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் பலருக்கும் அபராதம் போடப்பட்டிருக்கிறது. ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கையோடு அபராதமும் முகாம் அமைத்து வசூலிக்கப்படுகிறது.
இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ஜெமினி பிரிட்ஜ் அருகில் ஹெல்மெட் போடாமல் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த ஒருவர் உடனே புகைப்படம் எடுத்து, வாகன எண், நேரம், நாள் என்பதை குறிப்பிட்டு, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications