சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷ் மகன்.. விலையுயர்ந்த டூவீலரில் விதிமீறல்.. ரூ.1000 அபராதம்
சென்னை: நடிகர் தனுஷின் மூத்த மகன் பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவருக்கு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகன் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் பெயர் யாத்ரா. இவருக்கு வயது 17. இளைய மகன் பெயர் லிங்கா. தற்போது நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தனுஷின் மூத்த மகன் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் விலையுயர்ந்த ஆர்15 ரக பைக்கை ஹெல்மெட் அணியாமல் ஓட்டியுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு அருகே அவர் பைக் ஓட்டிய போட்டோ வெளியானது.
இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் அவர் ஓட்டியதாக பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் அவருக்கு 17 வயது தான் ஆகிறது. லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டலாமா? எனவும் கேள்வி எழுப்பினர். அதோடு
அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பலர் கூறினர். இதற்கிடையே தான் தனுஷின் மகன் பயிற்சியாளர் ஒருவர் உதவியுடன் பயிற்சி எடுத்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் வெளியானதாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து வீட்டுக்கு அருகே பைக் ஓட்டி பயிற்சி எடுப்பது ஒரு தவறா? என தனுஷ், ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இத்தகைய சூழலில் தான் சென்னை போக்குவரத்து போலீசார் தனுஷின் வீட்டுக்கு சென்று அவரது மூத்த மகன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதை சுட்டிக்காட்டி ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications