Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்தபா.. முஸ்தபா.. திடீரென வண்டியை மறித்து.. வாகன ஓட்டிகளை நெகிழ வைத்த சென்னை டிராஃபிக் போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை டிராஃபிக் போலீசார், சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி, நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்தது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திடீரென வண்டியை மறித்து.. வாகன ஓட்டிகளை நெகிழ வைத்த சென்னை டிராஃபிக் போலீசார்!

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகளைப் பரிமாறியும், ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டியும் கொண்டாடுகின்றனர்.

    இந்தியா உட்பட பல நாடுகளில், ஆகஸ்ட் முதல் வாரம் முழுவதுமே நண்பர்கள் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என பல இடங்களிலும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    நண்பர்கள் தினம்

    நண்பர்கள் தினம்

    அந்தவகையில், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர், சாலைகளிலேயே நண்பர்கள் தினத்தைக் கொண்டாடியுள்ளனர். சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஃப்ரெண்ஷிப் பேண்ட் கட்டி, நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்துள்ளனர். எப்போதும் ஹெல்மெட் போடாவிட்டாலோ, விதிகளை மீறி வந்தாலோ மறிக்கும் போக்குவரத்து காவலர்கள், நண்பர்கள் தினத்துக்காக மறித்து வாழ்த்துச் சொன்னது வாகன ஓட்டிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    நட்புக் கயிறு

    நட்புக் கயிறு

    சென்னையில் சாலைகளில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்டி வந்த டூவீலர், ஃபோர் வீலர் வாகன ஓட்டிகளுக்கு ஆண், பெண் பேதமின்றி நட்புக் கயிறுகளைக் கட்டிவிட்டு, நண்பர்கள் தின வாழ்த்துகளைக் கூறி கை குலுக்கினர் சென்னை மாநகர போக்குவரத்து காவலர்கள்.

    வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி

    வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி

    வாகன ஓட்டிகளுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி, போக்குவரத்து காவலர்கள் அவர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது தொடர்பான வீடியோவை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    மதுரையிலும்

    மதுரையிலும்

    இதேபோல, மதுரையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், வாகன ஓட்டிகளை மறித்து நிறுத்தி, அவர்களுக்கு தேசியக் கொடிகளையும், இனிப்புகளையும் வழங்கி நண்பர்கள் தின வாழ்த்துத் தெரிவித்து நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினர். நண்பர்கள் தினத்தை போக்குவரத்து போலீசார் வித்தியாசமாக கொண்டாடியது வரவேற்பைப் பெற்றுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+