சென்ட்ரல், பாரிமுனையில்.. 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல்! ஸ்தம்பித்தது சென்னையின் இதயப்பகுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாகவே சென்னையின் சென்ட்ரல், பாரிமுனை பகுதிகள் போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட இடங்கள்தான். அதிலும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே டிராபிக் ஓவராக இருந்தது. இந்நிலையில் தீபாவளி எல்லாம் முடிந்த பின்னரும், இன்று நெரிசல் ஏற்பட்டிருகிறது. இதனால் மக்கள் ரொம்பவே டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்.

வடசென்னையிலிருந்து சென்ட்ரல் அல்லது கோயம்பேடு வருபவர்களுக்குதான் இந்த டிராபிக் நெரிசலின் வலி புரியும். குறிப்பாக திருவொற்றியூரிலிருந்து 159, 101 பஸ் பிடித்த கோயம்பேடு, ரோகினி தியேட்டர் வர நினைத்தால்.. அல்லது இந்த பகுதிகளிலிருந்து வேலையை முடித்துக்கொண்டு திருவொற்றியூர் போக நினைத்தால்.. குறைந்தது 1.30 மணி நேரம் ஆகிவிடும்.

Chennai traffic

அதிலும் பஸ் பாரிமுனை பகுதிக்குள் பஸ் சென்றுவிட்டது எனில்.. அதிலிருந்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சென்ட்ரலிலிருந்து பஸ் புறப்பட்டு, பாரிமுனை வந்து.. உயர்நீதிமன்ற வளாகத்தை தாண்டினால்தான் நிம்மதியே வரும். அந்த அளவுக்கு இந்த ஏரியாக்களில் டிராபிக் இருக்கும். அதிலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கும் போது டிராபிக் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

இருப்பினும் இன்று எந்த பண்டிகையும் இல்லை என்றாலும், இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

காரணம், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 4700 புதிய வழக்கறிஞர்கள் பதிவு நடந்தது. இந்த என்ரோல்மென்ட் காரணமாக உயர்நீதிமன்றத்தை சுற்றியுள்ள பாரிமுனை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+