அதிகாலையில் கீரைக் குழம்பு வச்சிட்டு! தூய்மை பணியாளர் வரலட்சுமி கடைசியா சொன்னது என்ன? கணவர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கண்ணகி நகரில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பலியான வரலட்சுமி அதிகாலை வீட்டை விட்டு கிளம்பிய போது, தனது மாமியாரிடம், "மழை பெய்வதால் கணவரை பைக் எடுத்துக் கொண்டு எங்கும் சுற்ற வேண்டாம்" என சொல்லுமாறு கூறிவிட்டு சென்றவர்தான். பிறகு வீட்டிற்கு சடலமாகத்தான் வந்தார் என கணவர் ரவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் வரலட்சுமி (30). அந்த பகுதியில் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவில் அதிக மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது.

chennai varalakshmi

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டில் இருந்து தூய்மைப் பணிக்காக புறப்பட்டுச் சென்றார். அப்போது கண்ணகி நகர் 11 ஆவது குறுக்குத் தெருவில் சென்ற போது சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்ததும் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் 50 பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணகி நகர் போலீஸார் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் ரவி, பெயிண்ட்டராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு யுவஸ்ரீ (10), மணி (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வரலட்சுமியின் குடும்பத்திற்கு தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் சார்பில் ரூ 10 லட்சமும், தமிழக மின்சார வாரியம் சார்பில் ரூ 10 லட்சமும் என ரூ 20 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

கணவர் ரவி சிறிய உடல் பாதிப்பு கொண்டவர். அவருக்கான சிகிச்சையை அரசே ஏற்கும். அவருக்கு உர்பேசர் நிறுவனத்தில் கண்காணிப்பாளர் போன்ற இலகுவான வேலை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அது போல் பள்ளியில் படித்து வரும் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரலட்சுமியின் இறப்பு குறித்து அவருடைய கணவர் ரவி கூறுகையில்,"என் அம்மாவிடம் என் மனைவி, 'கீரை குழம்பு வச்சிருக்கேன். நான் போயிட்டு 3 மணிக்கு வந்துடுறேன். மழை வருது, அவர வெளியே போக வேண்டாம்னு சொல்லுங்க'ன்னு சொல்லிட்டு போனா, அதுக்கு அப்புறம் வீட்டுக்கு இந்த நிலையில்தான் வந்தாள்" என கணவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+