திமுக-காங். கூட்டணிக்குள் ஒரு சலசலப்பு .. மத்திய சென்னையில் உரசினால் திருச்சியில் தீப்பிடிக்குமாம்
சென்னை: காங்கிரஸ் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருவர் நடுவே ஏற்பட்டுள்ள மோதல்தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசும், திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மத்திய சென்னையில் தயாநிதி மாறன் திமுக சார்பிலும், திருச்சியில், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுவதும் அறிந்ததே.
இங்குதான் ஒரு குளறுபடி ஆரம்பித்துள்ளதாக, ஊடகத்தினரிடம், புலம்புகிறார்கள், திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர்.

உரசல்கள்
காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருப்பவர் வீரபாண்டி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள், தலைவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர். இவருக்கும், வடசென்னை திமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபுவுக்கும் ஏற்பட்ட உரசல், விவகாரங்கள் இரு கட்சி விவகாரங்களை அறிந்த பலரும் தெரிந்த உண்மையாகும்.

தேர்தல் பணி
இந்த உரசல் இன்னும் தொடருவதாகவும், எனவே, மத்திய சென்னையில், காங்கிரஸ் கட்சி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு தேர்தல் பணியாற்றவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

திருச்சி நிலை
இதனால் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சியில் பிரசார பணிகளில் ஈடுபட திமுக நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிருப்தி நீடித்தால், திருச்சியில் திமுக தேர்தல் பணியாற்றாத சூழல் உருவாகும் என்பதால், காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது.

தீவிர ஆலோசனை
எனவே, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து வீரபாண்டியை நீக்கிவிட்டு, ஈவிகேஎஸ், இளங்கோவனுக்கு நெருக்கமான முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கலாமா.. அப்படி நியமித்தால், வீரபாண்டி ஆதரவாளர்கள் அதிருப்தியை தேர்தல் நேரத்தில் சந்திக்க வேண்டி வருமே என்றெல்லாம், தீவிர ஆலோசனையில் உள்ளாராம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications