சென்னை வீடுகளில் திடீர் மாற்றம்! தெருநாய்க்களை தடுக்க புது யோசனை! ஒர்க்கவுட் ஆகாது மக்களே!
சென்னை: சென்னையில் நாய்கள் மற்றும் பூனைகளை கட்டுப்படுத்த வீட்டின் வாசல்களில் நீல நிற தண்ணீர் கொண்ட பாட்டில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வீடுகளுக்குள் தெரு நாய்கள் வருவது தடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்படியான யோசனைகள் வேலைக்கு ஆகாது என்று என்று விலங்கு நல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை, சாலி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு வெளியே, நீல நிற நீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர் தெரு, காவேரி ரங்கன் நகரில் வரிசையாக அமைந்துள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளின் குடியிருப்பாளர்கள் இந்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த யோசனை பலன் கொடுக்காது என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து விலங்குநல ஆய்வாளர்கள் கூறுகையில், "நாய்களுக்கு மனிதர்களை போல பல வண்ணங்களை பிரித்து பார்க்க முடியாது. நீலம், மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்கள் மட்டும் தான் நாய்களின் கண்களுக்கு தெரியும். எனவே தனியாக நீல நிறத்தை பார்த்து நாய்கள் பயப்படாது. அந்த நிறம், நாய்களுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட நிறம்தான். இப்படி பாட்டில்களை கட்டுவது நாய்களை விரட்டாது. அதற்கு பதிலாக, வாசல் கேட்களில் வலையை பொறுத்தலாம்.
இது தவிர புத்திசாலித்தனமாக வேறு சில ஐடியாக்களையும் முயற்சித்து பார்க்கலாம். நாய்களுக்கு வினிகர் பிடிக்காது. எனவே நாய்கள் வரும் பாதையில் தண்ணீருடன் வினிகரை கலந்து தெளிக்கலாம். நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதால், இந்த வாசனை அவைகளுக்கு நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இந்த பாதையை நாய்கள் தவிர்க்கலாம். அதேபோல எலுமிச்சை மற்றும் சிட்ரஸ் வாசனைகளும் நாய்களுக்கு பிடிக்காது. எனவே, இந்த வாசனை கொண்ட தரை துடைப்பாண்களை பயன்படுத்தலாம்.
இந்த விஷயத்தில் அமோனியா இல்லாத ரசாயன கிளினர்களை பயன்படுத்த வேண்டும். அமோனியா சிறுநீர் வாசனையை போல இருக்கும். நாய்கள் ஒருமுறை சிறுநீர் கழித்த இடத்தை தனது வாசனையால் நினைவில் வைத்துக்கொள்ளும் என்பதால், மீண்டும் அதே இடத்திற்கு வரும். அப்போது அமோனியா வாசனையை அது சிறுநீர் என்று தவறாக புரிந்துக்கொள்ளும். எனவே அமோனியா கலந்த ரசாயன தரை துடைப்பான்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று கூறுகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி மற்றும் சிப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமம் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இதற்காக இன்று திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கத்தில் முகாம்கள் இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முகாம்களில் நாய்களுக்கு உரிமம் வழங்குவதுடன் மைக்ரோசிப் பொருத்தி தடுப்பூசி போடப்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications