உல்லாசத்துக்கு அழைத்த பெண்.. விழுந்தடித்து சென்னை வடபழனிக்கு ஓடிய இளைஞர்.. அங்கே பார்த்தால் "4 பேர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைஞர் ஒருவரை இளம்பெண் ஒருவர் உல்லாசத்துக்கு அழைத்தாராம்.. இந்த இளைஞரும் சென்றிருக்கிறார்.. என்னாச்சு தெரியுமா?

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் தாபா.. 20 வயதாகிறது.. இவர் பிழைப்புக்காக சென்னை வந்துள்ளார்.. பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் பகுதியிலேயே தங்கி, அங்கிருக்கும் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

Chennai Vadapalani Prostitution North Indian Youth

செல்போன்: இவருக்கு செல்போன் ஆப் மூலம் இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் சென்னை வடபழனியில் இருக்கிறாராம். இந்நிலையில், விஜய் தாபாவை அந்த பெண் உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.

இதைக்கேட்டு திக்குமுக்காடிப்போன விஜய், உடனே வடபழனிக்கு கிளம்பியிருக்கிறார்.. கங்கை அம்மன் காலனியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் விஜய். அப்பெண்ணுடன் உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்.. ஆனால், இதற்காக பேசிய பணத்தை விட கூடுதலாக தரும்படி இளம்பெண் கேட்டாராம்.

அதிர்ச்சி: இதைக்கேட்டதும் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதுவே 2பேருக்கும் வாக்குவாதமாக வெடித்துள்ளது.. அப்போது அந்த வீட்டின் இன்னொரு ரூமில், அதுவரை பதுங்கியிருந்த திருநங்கை ஒருவர் திடீரென வெளியே வந்தார்.. அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் வெளியே வந்தனர்.. இப்போது இளம்பெண்ணுடன் சேர்ந்து மொத்தம் 4 பேர் இளைஞரை ரவுண்டு கட்டினார்கள்..

அங்கிருந்த பீர் பாட்டிலை கீழே உடைத்து, குத்தி கொலை செய்து விடுவதாக விஜய் தாபாவை மிரட்டியிருக்கிறார்கள்.. அத்துடன், விஜய் பாக்கெட்டிலிருந்த ரூ.12 ஆயிரத்தையும் பறித்து விட்டு மிரட்டி வெளியே அனுப்பியிருக்கிறார்கள்..

செல்போன்: உயிர் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து விழுந்தடித்து கொண்டு வெளியே ஓடிவந்தார் விஜய்.. ஆனால், மீண்டும் அந்த கும்பலிடமிருந்து போன் வந்தது.. அதைத்தொடர்ந்து மிரட்டலும் வந்தது.

இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை விஜய் செல்போனுக்கு அனுப்பி வைத்த அந்த கும்பல், சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாக சொல்லி, மீண்டும் பணம் கேட்டுள்ளது..

புகார்: இப்படியே பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்த நிலையில், வேறு வழியில்லாமல், விஜய்தாபா போலீசுக்கு போனார்.. இந்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அப்ரின் பர்கானா(21), அஸ்விதா என்ற முஸ்தபா (26) என்ற திருநங்கை மற்றும் தினேஷ்குமார் (25), பரத்குமார் (24) ஆகிய 4 பேரையுமே கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் இப்போது விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+