சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அண்மையில் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் ஒரு புகார் அளித்தார். அதில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தார். அவர்கள் இதையே தொழிலாக செய்து வருவதும் விசாரணையில் உறுதியானது.

புரோக்கர்கள்
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. இதில் மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டதும் உறுதியானது. இவர்கள் தான், வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைத்து வந்திருக்கிறார்கள்.

பாலியல் புரோக்கர்கள்
கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டதை தெரிவித்தனர்.. இதைதயடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

உல்லாசம்
புரோக்கர் சந்தியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் (44) என்பவர் 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறினார்.

இன்ஸ்பெக்டர்
இது தொடர்பாக போலீசிடம் ராஜேந்திரன் விசாரணையின் போது கூறுகையில், நானும், இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் 15 ஆண்டு நண்பர்கள். ரெட்ஹில்ஸ் பகுதியில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஓராண்டாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

உல்லாசம்
என்னுடைய அலுவலகத்துக்கு சிறுமியை அழைத்து வருவேன். அங்கு புகழேந்தியும் வருவார். அங்கு வைத்து இருவருமே சிறுமியுடன் உல்லாசமாக இருப்போம் என்றார். இதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் புகழேந்தி கைது செய்யப்பட்டார். துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நேற்று இரவு இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையெ இன்ஸ்பெக்டர் புகழேந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பட்டியல் தயாரிப்பு
இதனிடையே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமியை பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை 5 காவல் ஆய்வாளர்கள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications