சென்னையே வியந்துடுச்சே.. இந்த "ஜெய்பீம்" கவுன்சிலரை ஞாபகம் இருக்கா.. ஒரே நாளில் பின்னியெடுத்த ஷர்மிலி
சென்னை: ஒரே நாளில், மாநகராட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளார் விசிக கவுன்சிலர் கிரண் ஷர்மிலி வினோத் குமார்.. யார் இவர்? இன்று என்ன நடந்தது?
மேயர் தேர்தலின்போது, விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் 107-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரண் ஷர்மிலி வினோத்குமார்.. இவர் ஒரு பிடெக் பட்டதாரி..

வார்டு உறுப்பினருக்கு இவர் போட்டியிட்டபோது, இவரது பிரச்சாரம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. தன் பகுதி மக்களிடம், நெருங்கி பழகி அவர்களின் கோரிக்கைகளை கேட்டதுடன், டென்னிஸ் விளையாடிக்கொண்டே வாக்குகளையும் சேகரித்திருந்தார்.
பெண்கள் நைட் ஷிப்ட்: ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் இவர் பேசும்போது, "நான் போகும் இடமெல்லாம் மக்கள் நிறைய கோரிக்கைகளை வைக்கிறார்கள்.. ஜிம் கட்டி தர வேண்டும் என்றெல்லாம் விளையாட்டு தொடர்பாக இளைஞர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். பெண்கள் இப்போதெல்லாம் இரவுப்பணிகளுக்கு சென்று வருகிறார்கள். ஆனால், தெருக்களில் விளக்குகள் இல்லை, பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். நான் வெற்றி பெற்றால், தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுப்பேன்.
களப்பணியில் இறங்கி நான் செயல்படுவேன் என்பதால்தான், இந்த வாய்ப்பை எனக்கு தந்திருக்கிறார்கள்.. கட்சியிலுள்ள பெரியவர்களின் அனுபவத்துடன், என்னிடமுள்ள வேகம், விவேகமும் இணைந்து சிறப்பாக செயல்படுவேன்" என்றெல்லாம் பேசி, வார்டு மக்களை ஈர்க்க வைத்திருந்தார்.
பதவியேற்பு: இதற்கு பிறகு, வெற்றி பெற்று இவர் பதவியேற்றபோது, ஜெய்பீம் என்ற முழக்கத்துடன் பதவியேற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.. இந்நிலையில், இன்று சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், கிரண் ஷர்மிலி வினோத்குமார் பேச்சு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
கூட்டத்தில் பேச ஆரம்பித்ததுமே கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பிறகு, தன்னுடைய வார்டு பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்... அப்போது, அவரது பெரும்பாலான கோரிக்கைகள் அங்கிருந்த அனைத்து கட்சி கவுன்சிலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
மேயர் பிரியா: குறிப்பாக, "காண்ட்ராக்ட் ஒப்பந்த புள்ளிகளை கோரும்போது, அதில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் குறைவான மதிப்பிற்கு ஒப்பந்தங்களை கோருகிறார்கள். இதில் யார் குறைவாக மதிப்பீடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் தரமற்ற வேலைகள் நடப்பதாகவும், இதற்கு ஒரு வரைமுறை செய்ய வேண்டும்" என்றும் மேயருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு மேயர் பிரியா, 50 லட்சம் வரை லிமிடெட் டெண்டர் கொடுக்கலாம் என்று அரசு உத்தரவு உள்ளதால், அதையே பின்பற்றலாம் என்று பதிலளித்தார்.. இந்த அறிவிப்புக்கு அனைத்து கவுன்சிலர்களும் கைகளை தட்டி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications