அவங்க எங்க அம்மா.. நடுராத்திரி வேளச்சேரியில் டீ குடிக்க வந்த 2 பேர்! சென்னையில் மூதாட்டிக்கு கொடூரம்
சென்னை: சென்னை வேளச்சேரி மேம்பால பூங்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய வேளச்சேரி போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஓட்டல் தொழிலாளர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள் தந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி விஜயநகர் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மதிய வேளையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் எங்கும் ரத்தக் காயங்களுடன் அழுதுகொண்டிருந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளச்சேரி போலீசார், பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு முதலுதவிக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு மூதாட்டியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இச்சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சென்னை மூதாட்டி பலாத்காரம்
இதனைத் தொடர்ந்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறிவிட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்புவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி, வேளச்சேரி மேம்பாலப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.
குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டியைப் பலாத்காரம் செய்த 2 மர்ம நபர்கள் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர்.
வேளச்சேரி பஸ் ஸ்டாண்டு
இந்நிலையில், கடந்த அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு இளைஞர்களை தனது செல்போனில் படம் பிடித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினார். அந்தப் படமும், சிசிடிவி காட்சியில் இருந்த உருவங்களும் கச்சிதமாகப் பொருந்திப் போனதால், அவர்கள்தான் குற்றவாளிகள் என்பது உறுதியானது.
இதையடுத்து வேளச்சேரி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹலாப் (30) மற்றும் முகமது ஆதில் (28) ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான இருவரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
டீ குடிக்க வந்த 2 பேர்
அதாவது சம்பவத்தன்று இரவு 2 பேரும் கடுமையான மதுபோதையில் தங்களது ரூமில் தூங்கி கொண்டிருந்தார்களாம்.. நள்ளிரவில் தாகம் எடுத்ததால் தண்ணீர் குடித்துவிட்டு, போதை தெளியாத நிலையில் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் டீ குடிக்க வந்துள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி, டீ குடிக்க பணம் கேட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் மூதாட்டியிடம் ₹1000 பணத்தை கொடுத்து, அவரை ஒரு தனியார் பைக் டாக்சியில் ஏற்றியுள்ளனர். பைக் டிரைவர் சந்தேகமடைந்து கேள்வி கேட்டுள்ளார்..
அதற்கு 2 பேரும், "இவர் எங்களுடைய அம்மா, மூன்று பேரும் டீ குடிக்க வந்தோம்" என்று பொய் கூறி ஏமாற்றியுள்ளனர். பிறகு மூதாட்டியைத் தங்களது வாடகை ரூமுக்கு அழைக்க முயன்றபோது, அவர் வர மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து மூதாட்டியை நைசாகப் பேசி சமாதானப்படுத்தி, மீண்டும் டீ குடிக்கலாம் என்று கூறி வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் உள்ள இருண்ட மாநகராட்சி பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த மூதாட்டியை இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தங்களது ரூமுக்கு திரும்பியுள்ளனர்.
மூதாட்டி என்ன ஆனாரோ
இதற்கு பிறகு 2 பேருக்கும் பயம் வந்துள்ளது.. மூதாட்டி என்ன ஆனாரோ? என்று பார்க்க சட்டையை மாற்றிக்கொண்டு மீண்டும் அதே பூங்காவிற்கு நடந்து வந்துள்ளனர். அப்போதுதான் ரோந்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர். கைதான 2 பேர் மீதும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பைக் டாக்சி டிரைவர் மற்றும் ரோந்து காவலர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு குற்றவாளிகள் 2 பேரும் உறுதி செய்யப்பட்டனர். இறுதியில் 2 பேரும் கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்...!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications