சென்னை டூ விஜயவாடா வந்தே பாரத் ரயில்.. எவ்வளவு வேகமாக செல்லும்? எங்கெல்லாம் நிற்கும்? இதை படிங்க
சென்னை: இன்று சென்னைக்கு இரண்டு வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு உள்ளது. விஜயவாடா மற்றும் சென்னை , திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டு உள்ளது . அதேபோல் மேலும் 7 ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மன் கி பாத் உரைக்குப் பிறகு தொடங்கி வைத்த ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சென்னை - விஜயவாடா ரயிலும் அடங்கும். ஒன்பது ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் விரைவான இணைப்பை வழங்கும்.

புதிய வந்தே பாரத் ரயில்கள் உதய்பூர் - ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படும்; திருநெல்வேலி-மதுரை - சென்னை; ஹைதராபாத் - பெங்களூரு; விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக); பாட்னா - ஹவுரா; காசர்கோடு - திருவனந்தபுரம்; ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி; ராஞ்சி - ஹவுரா; மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும்.
திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை தற்போது 11-12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாகக் கொண்டு வரும். அதே வேளையில், சென்னை மற்றும் விஜயவாடா இடையே புதிய வந்தே பாரத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6. 40 நிமிடங்கள்.மணிநேரமாகக் குறைக்கும்.
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இது இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயில் 652.49 கிமீ தூரத்தை சராசரியாக 83.30 கிமீ வேகத்தில் கடக்க 7 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுக்கும். வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி மதியம் 12.30 மணிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
நிறுத்தங்கள்: சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும்.
கலவை: தற்போதைய நிலையில், ரயிலில் எட்டு பெட்டிகள் இருக்கும். எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில், ரயில்வே அதை அதிகரிக்கலாம்.
அட்டவணை: செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் ரயில் இயக்கப்படும்.
நேரங்கள்: திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். விருதுநகர் (காலை 7.13), மதுரை (காலை 7.50), திண்டுக்கல் (காலை 8.40), திருச்சி (காலை 9.50) , தஞ்சாவூர் (10.10) மற்றும் விழுப்புரம் (காலை 11.54) மற்றும் தாம்பரம் (மதியம் 1.13 மணி) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். மற்றும் 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இது தாம்பரம் (மதியம் 3.18 மணி), விழுப்புரம் (மாலை 4.39 மணி), தஞ்சாவூர் (6.00), திருச்சி (மாலை 6.40 மணி), திண்டுக்கல் (இரவு 7.56 மணி), மதுரை (இரவு 8.40 மணி), விருதுநகர் (இரவு 9.13 மணி) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.
விஜயவாடா ரயில்: விஜயவாடா மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இது ஆறு மணி 40 நிமிடங்களில் தூரத்தை கடக்கும். பிரதமர் மோடி முதல் பயணத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, ஆந்திர பிரதேச ஆளுநர் எஸ். அப்துல் நசீர் மற்றும் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிறுத்தங்கள்: ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் இருக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications