வாக்குப்பதிவில் சொதப்பும் சென்னை! இந்த முறையாவது.. அதிக அளவில் மக்கள் வாக்களிப்பார்களா!
சென்னை: கடந்த சில தேர்தல்களில் சென்னையில் மிக குறைந்த அளவில்தான் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இந்த தேர்தலிலாவது பெரும்பாலானோர் வாக்களிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பின்னர், சென்னையில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் வாக்களிப்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சென்னையில் 60.4% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 74.8% வாக்குகள் பதிவாகியிருந்தன.
2019 நாடாளுமன்ற தேர்தலில், சென்னையில் 59.0%, தமிழகம் முழுவதும் 72.4% என்றும், 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 59.1% எனவும், தமிழகம் முழுவதும் 73.6% எனவும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இப்படியாக மாநிலத்தின் சராசரியை விட, சென்னையில் குறைவான அளவில்தான் வாக்குகள் பதிவாகி வந்திருக்கின்றன.
ஆனால் தற்போது எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம், வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டிருக்கிறது. இந்த 2026 தேர்தலில், தமிழகம் முழுவதும் சுமார் 74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 28.3 லட்சம் வாக்காளர்களே இறுதிப் பட்டியலில் உள்ளனர். இது கடந்த தேர்தலை விடக் குறைவு.
எனவே, இன்று மாலை அறிவிக்கப்படும் வாக்குப்பதிவு சதவீதம் 70%-ஐத் தாண்டினால், அது மக்கள் அதிகளவில் வந்ததால் மட்டுமின்றி, பட்டியல் சுத்திகரிக்கப்பட்டதாலும் இருக்கலாம்.
ஆனால், வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்தால் மட்டும், சென்னையில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்று அர்த்தமாகிவிடாது. தேர்தல் ஆணையம் ஏராளமான வாக்காளர்களை நீக்கியிருக்கியிருக்கிறது. எனவே மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விடக் குறைவாகவே இருந்தாலும், மொத்தப் பட்டியல் சுருங்கியிருப்பதால் சதவீதம் அதிகமாக காட்டும்.
உதாரணமாக, 100 பேர் கொண்ட பட்டியலில் 60 பேர் ஓட்டுப் போட்டால் பதிவான வாக்கு சதவிகிதம் 60%. அதே பட்டியலில் 10 பெயர்கள் நீக்கப்பட்டு 90 பேர் இருக்கும்போது, அதே 60 பேர் ஓட்டுப் போட்டால் சதவீதம் 66.6% ஆக உயரும். ஆக சதவிகிதம் உயர்கிறது என்பதால் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டதாக பொருள்படாது.
அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதுதான் முக்கியம். சென்னை இந்த எண்ணிக்கையை பூர்த்தி செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications