இரவில் குடிசைப்பகுதியில் பிரியா வீட்டிற்குள் 4 பேர்! சென்னை வியாசர்பாடியில் நம்பவே முடியாத ட்விஸ்ட்
சென்னை: சென்னை வியாசர்பாடி குடிசைப்பகுதியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, விசாரணையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை, இளைஞர்களிடம் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து வருகிறது. அத்தகைய விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.. எனவேதான், ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒழுங்குமுறை: அதன் ஒரு பகுதியாக, இணைய விளையாட்டுத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பதிவுசெய்வதற்கும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இணையத்தில் பணம் கட்டி விளையாடுவதற்கு ஆணையம் தடைவிதித்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், இது தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.. அதில், நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரை இணைய விளையாட்டுகளில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் கட்டி விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பணம்: அதுமட்டுமல்லாமல், பயனர் ஒருவர் இணைய விளையாட்டில் ஒரு நாளைக்கு, வாரத்திற்கு, மாதத்திற்கு எவ்வளவு பணம் செலவிடுகிறார் என்ற விவரத்தை அவருக்கு இணைய விளையாட்டு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருந்தால், பணத்தை வைத்து சூதாடுபவர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். 4 நாட்களுக்கு முன்புகூட, ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேட்டூர் மயானத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலைச் சுற்றி வளைத்து கைது செய்தது. சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள், பணம் ரூ.2,700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அதிரடி கைது: நேற்றைய தினமும் தூத்துக்குடி குளத்தூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவது போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து, 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 1820ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல சென்னையிலும் ஒரு கும்பல் நேற்று சிக்கியிருக்கிறார்கள்.. ஆனால், இவர்கள் அனைவருமே பெண்கள் ஆவர்.
வியாசர்பாடி DD பிளாக் குடிசைப் பகுதியில், பணம் வைத்து பெண்கள் சிலர் நள்ளிரவில் சூதாடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று விடியற்காலை, 3 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.. அங்கே விளையாடி கொண்டிருந்த 5 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதே பகுதியிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணை: பிடிபட்ட 5 பெண்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. அதில், வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்த பிரியா (30), வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (50), சூளை பகுதியைச் சேர்ந்த நவநீதம் (60), கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பழகி (35), புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த வினோதினி (31) என்பது தெரிய வந்தது.
இவர்களில் பிரியா என்பவர்தான் கேங் லீடராம்.. இவரது வீட்டில்தான் எல்லாரும் ஒன்றுசேர்ந்து விளையாடுவார்கள்.. பெரும்பாலும் மங்காத்தா என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. ஒவ்வொருவரும் தனித்தனியாக இதற்காக பணத்தைக் கொண்டு வந்து விளையாடியதும் தெரிய வந்தது... மொத்தம் 5 பேரிடம் இருந்து மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications