சென்னையில் கத்தி, அரிவாளுடன் விரட்டி விரட்டி தாக்குதல்.. அலறியடித்து ஓடிய மக்கள்! பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு திடீரென பயங்கர மோதலாக மாறியது. கத்தியை எடுத்து கொண்டு இரு தரப்பும் மாறி மாறி வெட்டியதால் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

சென்னையில் இளைஞர்களிடையே திடீர் திடீரென மோதல் ஏற்படுவது அவ்வப்போது நடந்தே வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்தாலும் கூட அதையும் தாண்டி சில மோதல் சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. அப்படியொரு சம்பவம் தான் இப்போது வண்ணாரப்பேட்டையில் நடந்துள்ளது.

Chennai Washermanpet Clash

தாக்குதல்

அங்கு கத்தி மற்றும் அரிவாளால் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓடினர். சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மோதல் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

என்ன நடந்தது

அன்றைய தினம் வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே இளைஞர் ஒருவர் பைக்கில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த போண்டா விஜய் கேட்டுள்ளார். இந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. போண்டா விஜய் என்பவர் பைக்கில் சென்ற இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. போண்டா விஜய் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் கத்தியை எடுத்துக்கொண்டு இளைஞர்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

திக்திக் சம்பவம்

அப்போது போண்டா விஜய் கையில் வைத்திருந்த ஆயுதத்தை இளைஞர்கள் பிடுங்கியதாகவும், பின்னர் அதே ஆயுதத்தை வைத்து அவரை திருப்பித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தான் நிலைமை மேலும் மோசமடைந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் அரிவாளுடன் போண்டா விஜய்யை விரட்டி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் விஜய் படுகாயமடைந்ததாக தெரிகிறது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கத்தி மற்றும் அரிவாள் தாக்குதலில் காயமடைந்த போண்டா விஜய் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை

முதற்கட்ட தகவலின்படி, பைக்கில் வேகமாக சென்றதாக கூறப்படும் இளைஞர் கார்த்தி என கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் ஆயுதங்களுடன் ஒருவரை விரட்டிச் செல்வதும், பொதுமக்கள் அச்சத்தில் அங்கிருந்து ஓடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+