களத்தில் 2000 பேர்.. சென்னையில் “ஃபுல் போர்சில்” குடிநீர் வாரியம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
சென்னை: சென்னையில் மழை நீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் 2000 களப்பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழை பெய்து வருவதை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மற்றும் 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 327 கழிவு நீர் உந்து நிலையங்களும் எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவகத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் கட்டுபாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 (20 Lines), 1916 (கட்டணமில்ல தொலைபேசி எண்) மூலம் தெரிவிக்கலாம்." என்று தெரிவித்து இருக்கிறார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த பெருமழையினால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழை நீரில் ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. சுரங்கப் பாதைகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
அதே நேரம் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணிகளின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக வடிந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்பு தொடர்பாக 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட்












Click it and Unblock the Notifications