சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. 3 மண்டலங்களில் வரும் அக். 10 ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
சென்னை: சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் அக்டோபர் 10 காலை 9 மணி முதல் அக்டோபர் 11 காலை 9 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சில பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் திருவான்மியூர், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்படும்.

அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் கார்டன், ஆர்.கே. மடம் தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
மேலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வெட்டுவாங்கேணி, செம்மஞ்சேரி, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் இந்த குடிநீர் விநியோகத் தடையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் (chennaimetrowater.tn.gov.in) முன்பதிவு செய்து, லாரி மூலம் குடிநீர் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
