சென்னையை நெருங்கும் மேக கூட்டம்.. வருகிறது கன மழை.. சாட்டிலைட் படம் போட்ட "சென்னை வெதர்"
சென்னை: சென்னை கடற்கரையை மேகம் கூட்டங்கள் நெருங்கி வரும் சாட்டிலைட் படத்தை "சென்னை வெதர்" தனியார் வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
Recommended Video
டிசம்பர் 1ம் தேதி வரை சென்னையில் கனமழை தொடரும் என்றும் சென்னை வெதர் தெரிவித்திருக்கிறது.
தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது.

கன மழை
அதிலும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தென் தமிழகத்தில் மழை வெளுத்து எடுத்த நிலையில் இன்று காலை முதல் சென்னையிலும் நல்ல மழை பதிவாகி உள்ளது.

தாம்பரம்
தாம்பரம் உள்ளிட்ட தெற்கு சென்னை பகுதிகளில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து, சென்னை வெதர் என்ற தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கனமழை டிசம்பர் 1ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு பிரேக்
நவம்பர் 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்யக்கூடும். இதன் பிறகு டிசம்பர் 2ம் தேதி முதல் சென்னையில் மழை பிரேக் எடுக்கும். பிறகு மழைக்கு வாய்ப்பு குறையும். இடைவெளி எடுத்துக் கொள்ளப் போகிறது மழை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேகங்கள்
மேலும் கனமழை மேகங்கள் உருவாகி சென்னை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வெதர் சென்னை கடற்கரையை நெருங்கும் மேகங்களால், சில மணிநேரங்கள் தொடர்மழை இருக்கலாம், என்று, தெரிவித்துள்ளதோடு மேகங்கள் சென்னையை நெருங்கி வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இன்று மாலை சென்னையில் அதிக மழை பெய்யக்கூடும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று சென்னை வெதர் பக்கத்தின் தனியார் ஆய்வாளர் ராஜா ராமசாமி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications