சென்னையில் இன்னைக்கு மழை இருக்கு.. விநாயகர் சிலைகளை பத்திரமா பாத்துக்கோங்க!
சென்னை: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெருக்களில் பிரமாண்டமாக விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்தது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக. 30ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.31 மற்றும் செப். 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
தமிழகத்தின் சராசரி மழை அளவு
தமிழகத்தின் சராசரி மழை அளவு பொறுத்தவரை, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை இயல்பை விட மழை 5% கூடுதலாக பெய்திருக்கிறது. இந்த காலகட்டங்களில் சராசரியாக 195.7 மில்லி மீட்டர் அளவுக்கு தமிழகம் மழையும் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை 204.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழையை பெற்றிருக்கிறது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 335% மழை பெய்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் 48%, கிருஷ்ணகிரியில் 46%, மயிலாடுதுறையில் 59%, ராணிப்பேட்டையில் 47%, தென்காசியில் 88%, தேனியில் 44% என்கிற அளவில் மழை கூடுதலாக பெய்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் 13% அளவுக்கு மழை இயல்பிலிருந்து கூடுதலாக பெய்திருக்கிறது. இந்த காலத்தில் சென்னையின் சராசரி மழை அளவு 283.9 மில்லி மீட்டர் தான். ஆனால் 320.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை 8% இயல்பை விட குறைந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 33%, அளவுக்கு மழை இயல்பை விட கூடுதலாக பிரிந்து இருக்கிறது செங்கல்பட்டில் 14% இயல்பை விட மழை குறைவாக பெய்திருக்கிறது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை












Click it and Unblock the Notifications