Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரை பிரிந்த மனைவி.. நீதிபதி அருகில் சென்ற குழந்தை.. அந்த வார்த்தை சொன்னதுமே மகிழ்ச்சியில் ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஹைகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் நேற்றைய தினம் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதைவிட சம்பந்தப்பட்ட குழந்தைகள் யார் என்ற ஆர்வமும் பரவலாக எகிறி வருகிறது

ஒரு திருமண பந்தம் முடிவுக்கு வரும்போது, அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அந்த தம்பதியினிரின் குழந்தைகள்தான். தம்பதியர் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து விவாகரத்தும் பெற்றுவிட்டால், குழந்தை யாரிடம் வளர வேண்டும்? என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்..

mhc chennai children

குழந்தை வளர்ப்பு: இதில் குழந்தை யாரிடம் வளர்வது பாதுகாப்பாக இருக்கும்? வசதியாக இருக்கும் என்றெல்லாம் அறிந்து, குழந்தையின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, நீதிமன்றமே முடிவுகளை எடுத்துவிடும்.

இதற்கு பிறகே தாயிடமோ அல்லது தந்தையிடமோ அக்குழந்தை ஒப்படைக்கப்படும்.. பிறகு மற்றொருவர், அந்த குழந்தையை, "குழந்தை அணுகுதல் மற்றும் பார்வையிடம் வழிகாட்டுதல்கள்" விதிப்படி குறிப்பிட்ட கால நேரங்களில் சந்தித்து கொள்வார்கள்.

சமீபத்தில், கேரளாவில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.. மொத்தம் 10 ஆண்கள் சேர்ந்து கேரளா ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.. அதில், "வழிகாட்டுதல்களில் சில வழிமுறைகளில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும், பல கோணங்களிலிருந்து பார்க்க தவறவிடுவதாகவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கை அறிவியல் ரீதியாக அணுகி பரிசீலிக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த 10 பேருமே விவாகரத்தானவர்கள்.. இந்த 10 பேருமே, தங்களின் குழந்தைகளை பிரிந்து வாழும் அப்பாக்கள் ஆவர்..

தந்தை நீதிமன்றம்: ஆனால், தந்தையர்கள். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் அறிவியல் ரீதியாக அணுகமுடியாது என்று கூறி, மனுவை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் சென்னையில் சம்பவம் நடந்துள்ளது.. தம்பதி இருவருமே சென்னையை சேர்ந்தவர்.. அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள்.. அங்கு இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. சில வருடங்களில் தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும், பிரிவதென முடிவு செய்தார்கள்.. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.

பெண் குழந்தை: இதையடுத்து, 2 குழந்தைகளையும், அவர்களின் அப்பா சென்னைக்கு அழைத்து வந்தார்.. தன்னுடைய அப்பா, தன்னுடைய தாத்தாவின் பராமரிப்பில் 2 குழந்தைகளும் வளர்ந்து வந்தனர். பெண் குழந்தைக்கு 15 வயதாகிறது.. ஆண் குழந்தைக்கு 13 வயதாகிறது..

2 குழந்தைகளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது அம்மா சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

அப்பா அம்மா: அப்போது, குழந்தைகள் 2 பேருமே, தன்னுடைய அப்பாவுடன் கோர்ட்டில் ஆஜரானார்கள்.. குழந்தைகளை அருகில் அழைத்த நீதிபதிகள், இருவரிடமும் இதுகுறித்து விசாரித்தார்கள்.. அப்போது, குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்திலேயே நீதிபதியிடம் பதிலளித்தார்கள்.. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு இதுதான்:

"சென்னை வளசரவாக்கத்தில் தந்தை மற்றும் தாத்தாவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக இருக்கிறார்கள்.. அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 2 பேருமே, பள்ளியின் டாப்பர்ஸ் ஆக உள்ளனர்.. சட்டவிரோத காவலில் 2 குழந்தைகளும் இல்லை. இதை, அவர்களை அழைத்து விசாரித்ததில் அறிய முடிகிறது. குழந்தைகள் இருவரும் தாயுடன் செல்ல விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்தை தெளிவாக தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள்: உலகளவில் குழந்தைகளின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இந்த வழக்கில் குழந்தைகள் இருவரின் விருப்பம், உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். எனவே, தாயின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குழந்தைகள் இருவரும் அவர்களின் விருப்பப்படி, தந்தையுடன் செல்லலாம்" என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை பிறப்பித்ததுமே, 2 குழந்தைகளும் நீதிபதிகளின் அருகில் சென்றார்கள்.. அவர்களிடம், "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" நீதிபதிகள் கேட்டார்கள்..

சிரித்தபடியே நன்றி: அதற்கு 2 குழந்தைகளும், "நன்றி" என்று சிரித்தபடியே தமிழில் சொன்னார்கள்.. நீதிபதிகளும் புன்னகையுடன் அந்த குழந்தைகளின் நன்றியை ஏற்றுக் கொண்டனர்.. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கேட்டதுமே, கோர்ட்டிலிருந்து அந்த குழந்தைகளின் அம்மா, கண்கலங்கியபடி வெளியே சென்றுவிட்டாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+