நீயின்றி நானில்லை.. கணவன் இறந்த துக்கத்தில் மரணித்த மனைவி.. கலங்க வைக்கும் சம்பவம்
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உடனடியாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
80 வயதான ராமலிங்கம் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு 70 வயதில் பானுமதி என்ற மனைவியும் தத்தெடுப்பு மகன் ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

கணவர் மரணம்
இவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லாத காரணத்தினால் தம்பி மகனை தத்தெடுத்து தன் மகன் போல் பாவித்து வளர்த்து வந்தனர். தற்போது 35 வயதை எட்டியுள்ள ஜெயராமன் இருவரையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வயோதிகம் மற்றும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டார் முதியவர் ராமலிங்கம். கடந்த 6 ஆண்டுகாலமாக படுத்த படுக்கையான ராமலிங்கத்திற்கு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் சிகிச்சை ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த ராமலிங்கம் கடந்த ஞாயிறன்று இந்த உலகத்தை விட்டு மறைந்தார். இதையடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள் திரண்டனர்.

மனைவி மரணம்
ஆனால் ராமலிங்கத்தின் மனைவி பானுமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவரின் பிரிவு அவரை அழக்கூட விடாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. நீண்ட நேரம் விரக்தியில் இருந்த பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பானுமதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மகன் ஜெயராமன் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

இறுதிச் சடங்கு
பின்னர் தம்பதியின் உடலுக்கு உரிய மரியாதை செய்து இறுதிச் சடங்குகள் செய்தார் மகன் ஜெயராமன். ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிராம மக்கள் சோகம்
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் கணவன் மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் அவர்கள் சண்டை, சச்சரவு செய்து ஒருநாள் கூட பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தனர். குடும்பநல நீதிமன்றத்திற்கு விவாகரத்தை கேட்டு செல்லும் தம்பதிகள் லைனில் நிற்கும் சமூகத்தில்தான் இதுபோன்ற பொக்கிஷங்களும் வாழ்ந்து மறைகின்றனர் என்றால் அது மிகையல்ல.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications