தகிக்கும் வெப்பம்.. சென்னையில் 107 டிகிரி பாரன்ஹீட்.. சூரியன் மேலும் சுடும்..மக்களே உஷார்!
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பநிலை பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வரும் நிலையில் இன்றும் நாளையும் மேலும் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை பல மாவட்டங்களில் கோடை மழை கொட்டித்தீர்த்தது. மோச்சா புயல் திசையை மாறி வங்கதேசம் மியான்மர் இடையே கரையைக் கடந்த காரணத்தால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது.

அக்னி நட்சத்திர காலத்தின் அனலை மக்கள் அனுபவித்து வருகின்றனர். சென்னையில் பல பகுதிகளில் நேற்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னையில் 2வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நண்பகல் 12 மணியளவில் சென்னையில் வெயிலின் அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய வெயிலின் தாக்கம் 107 டிகிரி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 19ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மோச்சா புயல் கரையை கடந்தாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் அருகே சூழ்ந்துள்ள ஈரப்பதம் இழுக்கப்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக அசௌகரியமான சூழல் ஏற்பட்டு,வெக்கையான சூழல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெயில் சுட்டெரித்தாலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 17 முதல் 19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 15.05.2023 முதல் 17.05.2023 வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.05.2023 மற்றும் 19.05.2023 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் 17ஆம் தேதி வரைக்கும் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications